உங்கள் முகவரி

கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பூச்சி தடுப்பு முறைகள் + "||" + Pest control methods carried out on structures

கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பூச்சி தடுப்பு முறைகள்

கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பூச்சி தடுப்பு முறைகள்
கட்டிடங்களை பாதிக்கும் கரையான் உள்ளிட்ட பூச்சிகளை அழிக்க ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ நிறுவனத்தினர் பயன்படுத்தும் பல்வேறு யுக்திகளில் பொதுவான 4 முறைகள் பற்றி இங்கே காணலாம்.
முதலாவது கரையான்களுக்கு செய்யப்படும் ‘டிரீட்மெண்ட்’ ஆகும்.

இரண்டாவது, அனைத்து வகை பூச்சிகளுக்கும் அடிக்கப்படும் ‘ஜெனரல் ஸ்பிரே’ முறையாகும். 

மூன்றாவது, கரப்பான் பூச்சிகளை சாப்பிட வைத்து கொல்லும் ‘ஜெல் டிரீட்மெண்ட்’ ஆகும். 

நான்காவது, கொசுக்களை அழிக்கும் ‘பாகிங்’ முறையாகும். ‘ஜெல் டிரீட்மெண்ட்’ எனப்படுவது, மிளகு வடிவத்தில் இருக்கும் ஒரு ரசாயனமாகும். கரப்பான் பூச்சிகளுக்கு உணவாக உள்ள இந்த ரசாயனத்தை அவை சாப்பிட்ட அடுத்த நிமிடம் இறந்தாலும், அவற்றின் முட்டைகளை அழிப்பது இயலாது. அதனால், இந்த ‘டிரீட்மெண்ட்’ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும்.