உங்கள் முகவரி

வீடு கட்டும் போது கவனிக்க... + "||" + Notice when building a house ...

வீடு கட்டும் போது கவனிக்க...

வீடு கட்டும் போது கவனிக்க...
வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சிலவற்றை பற்றி பார்ப்போம்.
முதலில் நாம் வீடு கட்டப்போகும் நிலத்தை நன்கு சோதிக்க வேண்டும். அங்கே மணல் எந்த மாதிரி அமைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.கட்டவிருக்கும் வீட்டிற்கு சுற்றி உள்ள வீடுகள்வீதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு வீடு கட்ட வேண்டும்.

சாலை மேடு பள்ளமாக இருந்தால் நாம் கட்டப்போகும் வீடு சற்று உயரம் உடையதாக இருக்க வேண்டும். காரணம் தெருவில் இருக்கும் தூசுகளும்மழைநீரும்வீட்டுக்குள் வந்து விடக்கூடாது. எனவே சாலையை விட வீடு தரை உயரமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கிழக்கு பள்ளம் மற்றும் மேற்கேமேடும் உள்ள வீதிகள்அமையப்பெற்றிருப்பது நன்மை என்கின்றனர்.