பலவகையான கதவு கைப்பிடிகள்
கதவுகளில் எவ்வளவு டிசைன்கள் இருந்தாலும் அதற்கு வைக்கப்படும் கைப்பிடிகள் நவீனமாக இருக்கும்பொழுது அவை கதவுகளின் தோற்றத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டுகின்றன.நீள் வட்டம், வட்டம், சதுரம், செவ்வகம் மற்றும் கிளாசிக் வடிவங்களில் கதவு கைப்பிடிகள் வடிவமைக் கப்படுகின்றன.
* மோர்டிஸ் கைப்பிடி,துருப்பிடிக்காத எஃகு கதவு கைப்பிடி,இழுக்கும் கைப்பிடி, பிளாஸ்டிக் கைப்பிடி, டோர் பேனிக் பார், அலுமினிய கதவு கைப்பிடி, கண்ணாடி கதவு கைப்பிடி என கைப்பிடிகளில் பல வகைகள் உள்ளன.
*கதவு கைப்பிடிகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன..அவை லீவர் கைப்பிடிகள் ,இழுக்கும் கைப்பிடிகள் மற்றும் கதவு குமிழ்கள் ஆகும்.
*லீவர் லாட்ச் கைப்பிடிகள் பொதுவாக வீடுகளின் உட்புறக் கதவுகள் அல்லது அலுவலக உட்புற கதவுகளில் பொருத்தப்படுவதைப் பார்க்க முடியும். இந்த கைப்பிடியில் இருக்கும் பொறிமுறையின் காரணமாக இதில் பொதுவாக பூட்டு இருக்காது.தேவைப்பட்டால் டெட் போல்ட்டுகள் மற்றும் செயின் லாக்குகள்,வெளிப்புற பூட்டுகளை பொருத்திக் கொள்ளலாம்.
* லீவர் லாக் கைப்பிடிகள் பார்ப்பதற்கு லீவர் லாட்ச் கைப்பிடிகளை ஒத்திருக்கும்.. இந்த இரண்டு கைப்பிடிகளில் இருக்கும் சம்மந்தப்பட்ட வழிமுறைகள் மற்றும் பாகங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.இவ்விரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால் லீவர் லாக் கைப்பிடிகளில் லீவரின் அடியில் மோர்டிஸ் தட்டுக்கான சாவி துவாரத்தைக் கொண்டிருக்கும்..இதனால் கதவு பூட்டப் படாத பொழுது அதனைத் திறப்பது எளிதாவும், அதே நேரத்தில் சாவியை உள்விடும்பொழுது கதவை பாதுகாப்பாக மூடுவதும் எளிது.
*இழுக்கும் கதவு கைப்பிடிகள் (புள் டோர் ஹேண்டில்ஸ்) எந்த உள்ளமைக்கப்பட்ட பூட்டுதல் அல்லது பாதுகாக்கும் வழிமுறைகளற்ற கைப்பிடிகளாகும். இவற்றிற்கு தாழ்ப்பாள் மற்றும் தாழ்ப்பாள் நிறுத்தம் தேவையில்லை. இவை வெறுமனே திறக்க மற்றும் மூடுவதற்காக வடிவமைக்கப்பட்ட கதவுகளுக்கானவை.இவை பாசேஜ் மற்றும் சமையலறை கதவுகளுக்கு கைப்பிடிகளாக பயன்படுத்தப்படுகின்றன..
*புஷ்கதவு கைப்பிடிகளை கிராஷ் பார் என்னும் கதவு திறப்பு பொறிமுறையால் ஒரு பட்டியை தள்ளுவதன் மூலம் கதவை திறக்க முடியும்.
*கதவு கைப்பிடிகள் கைப்பிடி, சாவி மற்றும் பூட்டுடன் கதவின் வெளிப்புறத்தில் நிறுவப்படும்.. அவை கதவின் மறுபுறம் லீவர் அல்லது கதவு குமிழ் மற்றும் டெட் போல்ட்டுடன் வருகின்றன..அவை பிரபலமானவை யாகவும் முன்கதவுகளில் பயன்படுத்த கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றன..
*சமீபத்திய கதவு வன்பொருள்( ஹார்ட்வேர்) போக்குகள் மரம், சாட்டின் பித்தளை மற்றும் பிரஷ் செய்யப்பட்ட தங்கம் போன்ற அலங்காரங்களுடன் வருகின்றன.வண்ண கைப்பிடிகளும் இப்பொழுது அதிக அளவில் நடைமுறையில் உள்ளன. கருப்பு அல்லது வெள்ளை தூள் பூசப்பட்ட உலோக லீவர் மற்றும் இழுக்கும் கதவுகள் ஒரு இடத்திற்கு சாதாரண மற்றும் சமகால உணர்வைக் கொண்டு வருகின்றன.
*சில்வர் பூச்சுடன் வரும் கைப்பிடிகள் சில தசாப்தங்களுக்கு முன்பிருந்தே பிரபலமாக உள்ள கைப்பிடிப் பூச்சாகும்..மர அலமாரிகள், சமையல் அறைகள் மற்றும் குளியலறைகளின் கதவுகளுக்கு ஏற்ற கைப்பிடிகளாக இவை உள்ளன.
*வாசல் கதவுகளுக்கு வைக்கப்படும் கைப்பிடிகளில் யானை முகம்,சிங்க முகம், மயில், அன்னம், மரத்தில் கிளிகள் அமர்ந்திருப்பது போல் இருப்பது, குதிரை வடிவம்,இலை வடிவம், மான் முகம்,நவீன விநாயகர் முகம், புத்தர் முகம்,நாக கன்னிகை, பாம்பு வடிவம்,மயில் தோகை என பல வடிவங்களில் பித்தளை மற்றும் உலோகங்களில் வடிவமைக்கப்பட்டு வருவதை தங்கள் வீடுகளின் கதவுகளுக்கு பொருத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.வீட்டின் முன்புற கதவு,மர அலமாரி கதவுகளுக்கு இத்தகைய நவீன கைப்பிடிகளை பொருத்துகிறார்கள்..இரட்டைக் கதவுகளுக்கு அரை வட்ட வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துவது போன்றும் ஒரு அரை வட்ட வடிவம் சற்று மேலும் மற்றொரு அரை வட்ட வடிவம் சற்று கீழேயும் இருப்பதுபோன்ற கைப்பிடிகள் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன.சமகால மற்றும் நவீன பாணி முன் கதவு கைப்பிடிகள் பெரும்பாலும் எளிமையானவை மற்றும் நேர்த்தியானவையாக இருக்கின்றன.இவை பெரும்பாலும் க்ரோம்,பித்தளை அல்லது கருப்பு நிறத்தில் கிடைக்கின்றன.இதுபோன்ற கைப்பிடிகள் பல அளவுகளில் கிடைக்கின்றன..
*பயோமெட்ரிக் கதவு கைப்பிடிகள்: இவை பாதுகாப்புக்கு 100% உறுதி அளிக்க கூடிய கைப்பிடிகளாக இருக்கின்றன.. இந்த கைப்பிடிகளில் கை ரேகைகளைப் பதிவு செய்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வீட்டிற்குள் நுழைய முடியும்.சில மின்னணு பூட்டுடன் கூடிய கைப்பிடிகளில் எண்களை அழுத்துவதன் மூலம் உள் நுழைவது போல் வடிவமைக்கப்பட்டு இருப்பவை மிகவும் பாதுகாப்பானவையாக இருப்பதால் இவற்றை இப்பொழுது கட்டப்படும் சொகுசான அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்துவதை கூடுதல் சிறப்பம்சமாக விளம்பரம் செய்வதை பார்க்க முடிகின்றது.
Related Tags :
Next Story