பேவர் பிளாக்ஸ்


பேவர் பிளாக்ஸ்
x
தினத்தந்தி 12 March 2022 3:19 PM IST (Updated: 12 March 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

பேவர் பிளாக்குகள் பலவண்ண மற்றும் பல வடிவத்தில் வெளிப்புற தரைத் தளத்திற்கு பயன்படுத்தப்படும் ஓடுகள் ஆகும். இவை கான்கிரீட், களிமண், ரப்பர், பிவிசி போன்ற பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன..

இந்த கற்கள் வெளிப்புற தரைத் தலங்களுக்கு குறிப்பாக நடைபாதைகளுக்கு பயன்படுத்தப்படும் பொழுது அவை அழகு மற்றும் ஆடம்பரமான தோற்றத்தை தருகின்றன..இவற்றை தரைகளில் அமைப்பதும், பராமரிப்பதும் எளிது என்பதால் வெளிப்புறபகுதிகளுக்கு டைலிங் செய்வதற்கு பலரால் இவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

*இன்டர்லாக்கிங் பேவிங் பிளாக்குகள், ரெஃப்லெக்டிவ் பேவிங் பிளாக்குகள் என பலவகைகளில் இவை கிடைக்கின்றன..

ஒன்று:வெற்று செங்குத்து முகங்கள் கொண்ட பேவர் பிளாக்குகள் எந்த வடிவத்திலும் நடைபாதை அமைக்கும்போது ஒன்றோடொன்று இணைக்கப்படாது .

இரண்டு:ஆல்டர்னேட்டிங் பிளெயின் மற்றும் வளைந்த/ நெளிவு கொண்ட செங்குத்து முகங்களை கொண்ட பேவிங் பிளாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து டிசைன்களை உருவாக்கும்.

மூன்று:அனைத்து முகங்களும் வளைந்து அல்லது நெளிந்திருக்கும் இவ்வகை பிளாக்குகள் எந்த வடிவத்திலும் செங்குத்து முகங்களுடன் ஒன்றோடொன்று இணைக்கப்படும் விதத்தில் இருக்கும்.

நான்கு: “எல்” மற்றும் “ எக்ஸ்” வடிவ பேவர் பிளாக்குகள், அனைத்து முகங்களும் வளைந்த அல்லது நெளிந்திருக்கும் மற்ற செங்குத்து முகங்களுடனும் ஒன்றோடொன்று இணைந்து டிசைன்களை அமைக்கும் படி உள்ளன.

*கருப்பு, பிரௌன்,கிரே, சிவப்பு, பஃப்,ஆட்டம்ன்,பிரிண்டில், ஹீத்தர் மற்றும் பர்ன்ட் ஓக்கர் போன்ற வண்ணங்களிலும் ஹெக்ஸகன்,சதுரம், வேவ், கிராஸ் டம்பிள்,ரவுண்ட் டம்பிள்,ஏரோ, ஜிக் ஜாக் மற்றும் கொலராடோ டிசைன் போன்ற வடிவங்களில் பேவிங் பிளாக்குகள் கிடைக்கின்றன.

*வீடு, தோட்டம், நகராட்சி பூங்காக்கள், மற்றும் தொழில்துறை அமைப்புகளில் வெளிப்புற தரையில் இந்த பிளாக்குகள் அதிகமாக பயன்படுத்தப் படுவதை பார்க்க முடியும்.

*இவை வலுவானது மற்றும் மோசமான வானிலை, அதிக போக்குவரத்தை தாங்கக்கூடியவையாகும்.

Next Story