வீடு முழுவதுமே குளுமைதான்-பொருத்தமான குளிரூட்டி(ஏசி) இருந்தால்


வீடு முழுவதுமே குளுமைதான்-பொருத்தமான குளிரூட்டி(ஏசி) இருந்தால்
x
தினத்தந்தி 8 May 2022 6:06 PM IST (Updated: 8 May 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

கோடைக்காலத்தில் வீட்டை குளுமையாக்கி வெயில் கொடுமையிலிருந்து நம்மை காப்பாற்றும் வீட்டு உபயோக சாதனம் ஏசி என்றால் அது மிகையாகாது.ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அறைகளுக்கு ஏற்றவாறு பொருத்தக் கூடிய வகையில் குளிரூட்டிகள் வந்துள்ளன.. ஒவ்வொரு வகை ஏர் கண்டிஷனரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக வடிவமைக்கப்பட்டு,அது வடிவமைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது.

ஏர் கண்டிஷனர் வகைகள்

* சென்ட்ரல் ஏர்கண்டிஷனர்

* டக்ட் லெஸ் மினி- ஸ்பிளிட்

* விண்டோ கண்டிஷனர்

* போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர்

* ஃப்ளோர் மௌண்டெட் ஏர் கண்டிஷனர்

* ட்யூயல் ஃப்யூயல் ஏர் கண்டிஷனர்

* ஸ்மார்ட் ஏர் கண்டிஷனர்

* ஜியோ தெர்மல் ஏர் கண்டிஷனர்

வீட்டிற்கு சிறந்த ஏசி வகையை தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய நான்கு முக்கியமான காரணிகள்:

* பட்ஜெட்

* ஆற்றல் நுகர்வு

* இருக்கும் இடத்திற்கு ஏற்ப ஏசியை தேர்வு செய்வது மற்றும்பராமரிப்பு

* குளிரூட்டும் சக்தி

சென்ட்ரல் ஏர்கண்டிஷனர்

வீடு பெரியதாகவும் பல அறைகளைக் கொண்டதாகவும் இருந்தால் அனைத்து அறைகளையும் ஒரே நேரத்தில் குளிர்விக்க விரும்புபவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இவ்வகை ஏசி இருக்கும். மத்திய ஏர் கண்டிஷனிங் யூனிட் ஒரு பிளவு அமைப்பைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் நிறுவப்பட்ட குழாய்கள் மூலம் காற்றை ஒழுங்குபடுத்துகிறது ..இது ஒரு குழாய் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஏசி இயக்கப்படும் பொழுது குழாய்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து அறைகளையும் ஒரே நேரத்தில் குளிர்விக்கிறது. அனைத்து அறைகளிலும் குளிர்ந்த காற்று புழக்கத்தில் இருப்பதால் , வீட்டில் ஈரப்பதம் குறைந்து ஒட்டு மொத்த சூழலும் குளிராகவும், வசதியாகவும் மாறுகின்றது.நவீன எச்விஏசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்மார்ட் ஹோம் அனுபவத்திற்காக, புரோகிரம் செய்யக்கூடிய தெர்மோஸ்டாட்களை மத்திய ஏர்கண்டிஷனருடன் இணைக்கலாம்..

டக்ட் லெஸ் மினி- ஸ்பிளிட்

சிறந்த செயல்திறனை தரக்கூடிய, அதிக குழாய்களற்ற, வீட்டின் ஒரு பகுதியை குளிர்விக்க, குழாய் இல்லாத மினி-ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர்களை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.இப்பொழுது கட்டப்படும் வீடுகளுக்கு குழாய் இல்லாத அமைப்புகள் சிறந்த ஒன்றாகவே இருக்கும்.. உட்புற அலகுகள் சிறியதாகவும், கச்சிதமானதாகவும் இருக்கும்.ஒவ்வொரு அறைக்கும் இந்த ஏர் கண்டிஷனர்களை பொருத்துவது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கின்றது.இவை ரிமோட் கண்ட்ரோலுடன் வருவதால் இவற்றை இயக்குவது எளிது. இது மட்டுமல்லாமல் ஸ்மார்ட் ஏசி கண்ட்ரோலருடன் இணைத்து உங்கள் கைப்பேசியை பயன்படுத்தி, எங்கிருந்தும் இவற்றை இயக்கலாம். இதனால் ஒவ்வொரு அறையின் வெப்பநிலையையும் தனித்தனியாக கட்டுப்படுத்த முடியும்.

விண்டோ ஏசி

ஒரு அறை அல்லது சிறிய பகுதியை குளிர்விக்க பொருத்தமான குளிரூட்டி என்று இவற்றைச் சொல்லலாம்..இவை பல அளவுகளில் கிடைக்கின்றன.விண்டோ ஏசி என்பது அனைத்து கூறுகளும் உள்ளே இணைக்கப்பட்ட ஒற்றை அலகு(யூனிட்) ஆகும். இவ்வகை குளிரூட்டிகள் பெயருக்கு ஏற்றார் போல் ஒரு ஜன்னல் அல்லது சுவற்றில் ஒரு துளை மூலம் நிறுவப்படுகின்றன. இவை குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய ஏசியாகவும்,நிறுவ மற்றும் பராமரிக்க எளிதாகவும், தரை இடத்தை எடுத்துக்கொள்ளாமல் ஜன்னல் அல்லது சுவற்றில் பொருத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

போர்ட்டபிள் ஏசி

இவ்வகை ஏசி விண்டோ ஏசிக்களைப் போன்றது..ஒரே அலகில் அனைத்து கூறுகளும் உள்ளே இணைக்கப்பட்டுள்ளன, இவற்றை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு எளிதாக நகர்த்திச் செல்ல முடியும்.நிரந்தரமாக ஏசி பொருத்த முடியாத இடத்திலோ அல்லது தற்காலிகமாக இடத்தை குளிர்விக்க விரும்பக்கூடிய சூழ்நிலையிலோ நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற குளிரூட்டியாக நூறு சதவிகிதம் இவை இருக்கும்.இவை மிகவும் சிறிய அளவில் இருப்பதால் இவற்றை மிகச் சிறிய இடங்களில் கூட பயன்படுத்த முடியும்.இவற்றை விரைவாக, எளிமையாக வீடுகளில் பொருத்திவிட முடியும்..ஒரு மின்விசிறியைப் போல குளிர்ச்சி தேவையான நேரத்தில் இயக்கி தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும்.

குழந்தைகளின் படுக்கை அறை,குளியலறை,செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் இடங்களுக்குக்கூட இவ்வகை குளிரூட்டிகள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.இவற்றை நிறுவுவதற்கு நிரந்தரமான அமைப்புகளை அமைக்கத் தேவையில்லை. சட்டென்று இருக்கும் இடத்தை குளிரூட்டுவதற்கு பயனுள்ள சாதனமாக இது செயல்படுகின்றது.

ஃப்ளோர் மௌண்டெட் ஏசி

தரையிலிருந்து ஆறு அங்குலம் உயரத்தில் சுவற்றில் பொருத்தப்பட்ட இந்த ஏசியின் வெளிப்புற அலகு பெரிய தள தயாரிப்பு அல்லது எந்த குழாய் வேலையும் இல்லாமல் நிறுவப்படுகிறது..சாய்வான சீலிங் கொண்ட டைல்கள் ஒட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட அறைகள் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களால் கட்டப்பட்ட அறைகளுக்கும் இவ்வகை ஏசி சிறந்த ஏற்பாடாகவே கருதப்படுகின்றது.

ஸ்மார்ட் ஏசி

ஸ்மார்ட் ஏர்கண்டிஷனர் என்பது ஒரு வகை மினி- ஸ்பிளிட்,விண்டோ அல்லது போர்ட்டபிள் ஏசி ஆகும். இவை ஐஓடி மூலம் இயக்கப்படுகிறது.. இந்த ஏசிகள் வைஃபை உடன் இணைக்கப்பட்டு, ஸ்மார்ட் ஃபோன் மூலம் உலகளாவிய கட்டுப்பாட்டை வழங்கும் நேட்டிவ் ஆப்ஸுடன் வருகின்றன..உற்பத்தியாளர்களை பொறுத்து, இவ்வகை ஏசிகள் பல செயல்பாடுகளுடன் வருகின்றன..இவற்றில் சில வாராந்திர திட்டமிடல், ஜியோஃபென்சிங்,வசதியான பயன்முறை, வெப்பநிலை வரம்பு கட்டுப்பாடு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த வசதியுடன் ஆற்றல் சேமிப்பும் கிடைக்கின்றது.

Next Story