எதிர்காலம் நிறைந்த கட்டுமானப் பொருட்கள்


எதிர்காலம் நிறைந்த கட்டுமானப் பொருட்கள்
x
தினத்தந்தி 14 May 2022 9:18 AM GMT (Updated: 14 May 2022 9:18 AM GMT)

கட்டுமானப் பொருட்களை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்தின் காரணமாக கட்டுமானம் மற்றும் சிவில் பொறியியல் நடவடிக்கைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. தற்பொழுது கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் பெரும்பாலான பொருட்கள் சுற்றுச்சூழலை அதிக அளவு மாசு படுத்துவதாக உள்ளன..

அதே நேரத்தில், கட்டுமானப் பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தில் ஏற்படும் இடைவெளி, ஆற்றல் திறன் மற்றும் சிக்கனமான கட்டுமான முறைகளின் தேவை ஆகியவற்றின் காரணமாக புதுமையான வளங்களை கட்டுமானத்தில் உபயோகப் படுத்துவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உருவாகி உள்ளது .

இயற்கையாக இந்தியப் பண்ணைகளில் பெரிய அளவில் பயிரிடப்படும் இருபத்தி ஏழு வகையான விவசாய தொழில்துறை கழிவுகள், துணைப் பொருட்கள், எச்சங்கள், இயற்கை இழைகள், நெல் மற்றும் கோதுமை உமி, கரும்புச் சக்கை, தென்னைநார் மற்றும் சணல் போன்ற பொருட்கள் கட்டுமானத்திற்கான பொருட்களைத் தயாரிப்பதில் உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்த பொருட்களில் சில அவற்றின் ஆயுட்காலம், ஆகும் செலவு மற்றும் உள்ளூரில் கிடைக்கும் தன்மை காரணமாக கட்டுமான உபயோகத்தில் தனித்து நிற்கின்றன.

மூங்கில் நெளிதாள்

பழங்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தபட்ட கட்டுமானப் பொருட்களில் மூங்கிலும் ஒன்று. சமீபத்திய ஆண்டுகளில் கட்டுமானத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக இது உள்ளது..குறிப்பாக, மூங்கில் அதன் உறுதித்தன்மை மற்றும் பல்துறை திறன் காரணமாகவும்,குறைந்த விலையில் கிடைப்பதன் காரணமாகவும் கட்டுமானத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.மூங்கில் பாய் பலகை, மூங்கில் பாய் வெனீர் கலவை, மூங்கில் பாய் வடிவ பொருட்கள், கூரை மற்றும் திரைச்சீலைகளாக மூங்கில் பாய் நெளிதாள் போன்ற பாய் அடிப்படையிலான தொழில்துறை தயாரிப்புகளை வீடுகள், உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் பயன்படுத்துவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மற்றும் கால்வனேற்றப்பட்ட எஃகு தாள்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக மூங்கில் பாய் நெளிதாள்கள் இருக்கின்றன. இந்திய ஒட்டுப்பலகை தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த நுட்பத்தை உருவாக்கியுள்ளது. பிசின் மற்றும் பாதுகாக்கப்பட்ட திரவம் பூசப்பட்ட மூங்கில்களை சூடான அலை தகடுகளில் அழுத்தி மூங்கில் பாய் நெளிதாள்களாக வடிவமைக்கிறார்கள். இந்த மூங்கில் நெளிதாள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையாகவும், ஆற்றல் திறன் கொண்டவையாகவும் மற்றும் நல்ல தீ எதிர்ப்பை கொண்டவையாகவும் உள்ளன.

அரிசி உமி சாம்பல் கான்கிரீட்

நெல்உமிகளை எரித்த பிறகு உற்பத்தி செய்யப்படும் அரிசி உமி, சாம்பல் கான்கிரீட்டிற்கான கலவையாக பயன்படுத்தப்படுகிறது. அரிசி உமி சாம்பல் அதிக வினைத்திறன் மற்றும் போசோலானிக் பண்புகளைக் கொண்டிருப்பதால்,இது சிமெண்டின் வேலைத்திறன் மற்றும் திறமையை மேம்படுத்துகிறது. அரிசி உமி சாம்பலில் உள்ள சிலிக்கா, கால்சியம் ஹைட்ராக்சைடுடன் இணைவதன் விளைவாக அமில சூழல்களுக்கு சிறந்த எதிர்ப்பாக செயல்படுகின்றது. இவை கான்கிரீட் ஸ்லேக்கிங்கின் போது வெப்ப பரிமாணத்தை குறைத்து, நிலைமாறு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் வலிமை, ஊடுருவ கூடிய தன்மை மற்றும் நீடித்த தன்மையை அதிகரிக்கிறது. துளை கட்டமைப்பை மாற்றுவதோடு போசோலோனிக் எதிர்வினை மூலம் நீரேற்றப்பட்ட சிமெண்ட் பேஸ்ட்டில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகிறது..மைக்ரோ நுண்துளை அமைப்பு மூலம் மொத்த மேற்பரப்பில் கார அயனிகளின் பரவலைத் தடுக்கிறது..அரிசி உமி சாம்பலில் உள்ள சிலிக்கா,கால்சியம் ஹைட்ராக்சைடு டன் இணைந்து அமிலச் சூழல்களுக்கு எதிராக சிறந்த எதிர்ப்பை உருவாக்குகிறது. பல சோதனைகளின் அடிப்படையில் அரிசி உமி சாம்பல் கலக்கப்பட்ட கான்கிரீட் சிறப்பாக வேலை செய்யக்கூடியது மற்றும் நீடித்து உழைக்க கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படுவதால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிமெண்ட் மற்றும் கான்கிரீட் தொழிலுக்கு இந்த அரிசி உமி சாம்பல் கான்கிரீட் வரப்பிரசாதமாக உள்ளது.

பிளாஸ்டிக் செங்கல்கள்

எதிர்காலத்தில் பெரிய அளவில் உபயோகப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பைத் தருகின்ற கட்டுமானப் பொருளாக இது உள்ளது.வெளிநாடுகளில் அதிக அளவில் இந்த செங்கல்கள் பயன்பாட்டில் உள்ளன..பிளாஸ்டிக் பைகளை உருக்கி சிமெண்ட் அச்சுகளில் ஊற்றி உருவாக்கப்படும் இந்த செங்கல்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்ததுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு வரிசை படுத்தப்படுகின்றன. அதன் பிறகு அது கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் பருத்தியை போல துண்டாக்கப்பட்டு ‘ பிளாஸ்டிக் காட்டன்’ எனப்படும் நிலைத்தன்மையை அடைகின்றது..பின்னர் துண்டாக்கப்பட்ட பிளாஸ்டிக் சேற்றுடன் கலந்து செங்கற்களாக அடைக்கப்படுகிறது.நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பில் இந்த வகை செங்கல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் குறிப்பாக, கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் இருந்து பிளாஸ்டிக் உருக்கப்பட்டு செங்கல் வடிவில் வடிவமைக்கப்பட்டு சாலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.இது மேற்பரப்பின் மீள் தன்மையை கணிசமாக மேம்படுத்தி நெடுஞ்சாலைகளின் அதிக சுமை தாங்கும் திறனுக்கு உதவுகிறது.

பாகாஸ் துகள் பலகை

கரும்பிலிருந்து சாறானது பிரித்தெடுக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் கூழ் பாகாஸ் என்று அழைக்கப்படுகின்றது. சர்க்கரை ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கணிசமான அளவு பாகாஸ் கொதிகலன்களுக்கு எரிபொருளாக அல்லது அழுக வைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.இந்த துணை தயாரிப்பு இலகுவாகவும் , குறைந்த விலை கொண்ட துகள் பலகைகளாகவும் இருப்பதால் மரத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன..அதிக விலை கொண்ட மரத்தினாலான தரைத்தளங்களுக்கு பதிலாக இந்தத் துகள் பலகைகளை பயன்படுத்துகிறார்கள்.

Next Story