உலர் சுவர்களுக்கு சிறந்த மாற்று


உலர் சுவர்களுக்கு சிறந்த மாற்று
x

உலர் சுவர் எனப்படும் டிரை வால் என்பது பிளாஸ்டர்போர்டு அல்லது வால்போர்டு ஆகும்..இது ஜிப்சம்,வெள்ளைத் தூள் அல்லது சாம்பல் சல்பேட் கனிமத்தை இணைத்து செய்யும் இரண்டு காகித அட்டைகளால் ஆனது.இந்த உலர் சுவர்களைப் பொருத்திய பிறகு அதிக அளவு பராமரிப்பு தேவைப்படுகிறது.பொதுவாக குழந்தைகள் க்ரையான்கள் மற்றும் மார்க்கர்களை வைத்து இந்த சுவர்களில் கிறுக்கி விளையாடும்போது நிச்சயமாக இவை சேதத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மாற்றாக மரம், பிளாஸ்டிக், ஒட்டுப்பலகை பிளாஸ்டர்கள், செங்கல்கள், மேஸனரி எனப் பல வந்து விட்டன..

உலர் சுவர்களின் வேலை தொடங்கியது முதல் முடிப்பதற்கு முன்புவரை தட்டுவது,மண்ணை அள்ளுவது, மண்ணைப் பூசுவது எனப் பல வேலைகள் உள்ளடங்கி இருக்கின்றது. உலர் சுவர் வீட்டை புதுப்பிப்பதற்கான மிகவும் வழக்கமான பொருளாக கருதப்படுகிறது (அதாவது பழைய சுவர்களை இடித்துவிட்டு புதிய சுவர்களை வைப்பது).

இப்பொழுது உலர் சுவர்களுக்கும் சிறந்த மாற்றாக உட் பிளாங்க்ஸ், வினீர் பிளாஸ்டர்,லாத் மற்றும் பிளாஸ்டர்,பிளைவுட் மற்றும் ஷீட் உட்,டெக்ஸ்சர் வால் பேனல்,செங்கல் மற்றும் மேஸனரி,எக்ஸ்போஸ்டு கான்கிரீட் பிளாக்,சிமெண்ட் போர்டு,பெக் போர்டு,கார்க்போர்டு மற்றும் வாஹூவால்ஸ் எனப் பலவகைகள் வந்துவிட்டன..

*உட் பிளாங்க்ஸ்:உலர் சுவர்களுக்கு பழமையான மாற்று என்று இவற்றைச் சொல்லலாம். இவை வீட்டிற்கு நேர்த்தியான மற்றும் பழமையான உணர்வை அளிக்கின்றது.இந்த பலகைகள் லேசான அரக்கு பூச்சுடன் மூடப் பட்டிருப்பதால் இவற்றின் மீது மார்க்கர் கொண்டு கிறுக்கினாலும் அவற்றை எளிதாக துடைத்து விட முடியும்..இவற்றைப் பொருத்துவதும், பராமரிப்பதும் எளிது. அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற ஒன்று என்று இவற்றைச் சொல்லலாம்.குறைந்த செலவில் உலர் சுவற்றுக்கான மாற்று என்று இவற்றைச் சொல்லலாம்.

*வினீர் பிளாஸ்டர் :இது கிட்டத்தட்ட சுவரின் மேற்பரப்பு முழுவதும் மண்ணைக் கொண்டு பூசுவது போன்றது. வழக்கமாக, ராஜஸ்தான் போன்ற வறண்ட மாநிலங்களில் இந்த பாணியிலான கட்டிடக்கலையை காணமுடியும்.பாரம்பரிய சுவர்களைக் காட்டிலும் பயன்படுத்த எளிதானது ஏனெனில், பாரம்பரிய உலர் சுவர்களைத் தொங்க விடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் போன்ற எதையும் வினீர் பிளாஸ்டர்ககளைப் பொருத்தும் பொழுது பயன்படுத்தத் தேவையில்லை..இவை இலகுவாகவும், செலவு குறைந்த மாற்றுப் பொருளாகவும் உள்ளது. .

*லாத் மற்றும் பிளாஸ்டர்:லாத் என்பது ஸ்டுட்கள் அல்லது சீலிங் ஜாயிஸ்ட்களுக்கு இடையில் கிடைமட்டமாக நிறுவப்பட்ட மரத்தின் ஒரு குறுகிய துண்டு ஆகும்.லாத் மற்றும் பிளாஸ்டர் என்பது லாத்தை பிளாஸ்டரிங் செய்வதை குறிக்கின்றது.. இது இடைக்கால பாணியிலான வாட்டில் மற்றும் டாப்(சேறு அல்லது களிமண்ணால் மூடப்பட்ட குச்சிகள் மற்றும் கிளைகளின் வலையமைப்பை கொண்ட ஒரு பொருள்) போன்றது. மரம், கையால் பிளக்கப்பட்ட மரம், புதியபாறை அல்லது உலோகத்தை லாத்தாகப் பயன்படுத்தலாம்.வளைந்த மேற்பரப்பை கொண்டிருக்கும் இவை சுவர்களுக்கு நேர்த்தியான அழகிய தோற்றத்தை அளிக்கின்றது. குதிரை முடியை பயன்படுத்தி செய்யப்படும் பிளாஸ்டர் மேற்பரப்பிற்கு மிகவும் வலுவான மற்றும் கண்களுக்குப் புலப்படுவது போன்ற அமைப்பை கொடுக்கின்றது.

* பிளைவுட் மற்றும் ஷீட் உட்: இவை நேரடியாக வேலை செய்வதற்கு உதவுவதுடன் உலர் சுவர்களுக்கு வேலை செய்வதைவிட குறைவான சிக்கலானவையாக உள்ளன. உலர் சுவர்களுக்கு மிகவும் மலிவான மாற்று என்று இவற்றைச் சொல்லலாம். இவை மிகவும் இலகுவாகவும்,நீர் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் இருப்பதுடன் நமது விருப்பத்திற்கு ஏற்ப வண்ணம் பூசிக் கொள்வது போலும் வசதியாக இருக்கும் இவை சுவர் அலங்காரங்களுடன் இணைந்து பார்ப்பதற்கு ஒரு ஆழமான நாட்டுப்புற உணர்வைத் தருகின்றது..

*டெக்ஸ்சர்வால் பேனல்:பளிங்கு கற்களால் ஆன இவை வீட்டிற்கு நேர்த்தியையும் அழகையும் சேர்க்கின்றது. முன்பெல்லாம் இவை பொதுவாக ஹோட்டல்களிலும், விலையுயர்ந்த ஓய்வு அறைகளிலும் காணப்பட்டது..முப்பரிமாண டெக்ஸ்சர்டு பேனல்களைக் கொண்டுள்ள இவை நிறுவ எளிதானவை.வெவ்வேறு வகையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களில் இவை கிடைக்கின்றன.

*செங்கல் மற்றும் மேஸனரி: எப்பொழுதுமே சுவர்களின் பசுமையான பாணி என்று கல் மற்றும் செங்கல் சுவர்களை சொல்லலாம்.இதுபோன்ற சுவர்களை பொதுவாக புறநகர் வீடுகளில் பார்க்க முடியும்..மூன்று உலர் சுவருடன் ஒரு செங்கல் சுவரையும் வைத்திருக்க முடியும்.நம்முடைய விருப்பத்திற்கேற்ப வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். இதில் படியும் தூசியை சுத்தம் செய்வதைத் தவிர பெரிய அளவில் பராமரிப்பு ஒன்றும் தேவையில்லை.. இவை நீடித்து உழைக்கக்கூடியவையாக உள்ளன

* எக்ஸ்போஸ்டு கான்கிரீட் பிளாக்: எக்ஸ்போஸ்டு கான்கிரீட் பிளாக் என்பது சுவரின் கட்டமைப்பு மேற்பரப்பை எந்தவித பூச்சும் இல்லாமல் அப்படியே விட்டு விடுவதாகும். ஒரு முழுமையான தோற்றத்தை அடைய இவற்றின் மீது வண்ணப்பூச்சுகள் பூசலாம். கண்ணாடி மற்றும் கருப்பு பர்னிச்சர்கள்,உயர்ந்த சீலிங் போன்ற நவீன அலங்காரங்களுடன் இவை இணையும் பொழுது இறுதியில் ஒரு அற்புதமான தோற்றத்தைக் கொடுப்பதாக இருக்கும். மேலும் இவை கவர்ச்சிகரமான, வலுவான, நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் தீ எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருக்கின்றன.

*சிமெண்ட் போர்டு:இவை எல்லா இடங்களிலும் சரியான கோணங்கள், தட்டையான மேற்பரப்புகள் மற்றும் கான்கிரீட் ஆகியவற்றை கொண்டிருப்பதால் சற்று கரடு முரடான கட்டிடக்கலைக்கு ஒத்ததாக இருக்கிறது. ஸ்டேர் கேஸ் பாப்களை காட்சிப்படுத்த பயன்படுத்தப் படுவதோடு அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளுக்கும் இவை ஏற்றவையாக உள்ளன.

*பெக் போர்டு: ஆரர்ட் ரூம், பொழுதுபோக்கு அறை அல்லது கரேஜ் ஆகியவற்றில் இவற்றைப் பொருத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். திருகுகளின்உதவியுடன் இவற்றை எளிதாக பொருத்தி பலகைகளில் அதே வண்ணத்தில் மேலும் வர்ணம் பூசலாம். கூடுதல் விளக்குகளைப் பொருத்தாமலேயே பிரகாசத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவையாக இவை இருக்கின்றன. கனமான மற்றும் மிகப்பெரிய கருவிகளை தொங்க விடக்கூடிய வசதி இதில் இருக்கிறது ..அதிக வலிமையை கொண்டிருப்பதோடு, அலமாரிகளை ஆதரிக்கும் திறன் கொண்டவையாகவும் உள்ளன.

*கார்க்போர்டு:கார்க் போர்டுகள்,பெக்போர்டுகளை ஒத்திருந்தாலும் அதிக எடையைத் தாங்கும் திறனற்றவையாக உள்ளன. நிறம், தடிமன் என பல்வேறு அளவுகளில் நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுக்க வசதியாக உள்ளன. இவை வெப்ப மற்றும் ஒலி காப்பு வழங்குவதுடன் தீ மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் சக்தி கொண்டவையாக உள்ளன.

*வாஹூவால்ஸ்:இந்தச் சுவர்கள் கான்கிரீட் அடித்தள சுவரை மறைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.இவை தோற்றத்தில் உலர் சுவர்களைப் போன்றே உள்ளன..எனவே, எளிய உலர் சுவர் மாற்றுகளில் ஒன்றாக சந்தையில் விற்பனையில் உள்ளன.இவற்றை சுவர்களில் பொருத்த திருகுகள் தேவையில்லை..அதேபோல் தேவையற்ற பொழுது இவற்றை நீக்குவதும்,தேவையானபோது பொருத்துவதும் எளிது.. இவை ஈரப்பத எதிர்ப்பு கொண்டவை.


Next Story