பிரம்மாண்ட தோற்றம் தரும் ட்ரே சீலிங்


பிரம்மாண்ட தோற்றம் தரும் ட்ரே சீலிங்
x

அறைகளில் சீலிங்கின் மையப் பகுதியின் சுற்றளவை சற்று உயர்த்தி அமைக்கப்படுவது ட்ரே சீலிங் என்று அழைக்கப்படுகின்றது .இவ்வாறு உயர்த்தப்பட்ட மையப்பகுதியின் வடிவம் பொதுவாக அறையின் விளிம்பை பின்பற்றுகிறது.சதுர அறைகளில் சதுரவடிவ ட்ரே சீலிங் அமைப்புகளும்,செவ்வக அறைகளில் செவ்வக வடிவில் ட்ரே சீலிங் அமைப்புகளும் இருப்பதுபோல் வடிவமைக்கப் படுவதால் இவற்றை நீங்கள் எளிதில் கண்டறியலாம். இவ்வாறு அமைக்கப்படும் ட்ரே சீலிங்கில் நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஸ்டைல் மற்றும் அலங்கார அமைப்புகளை அமைத்துக் கொள்ள முடியும்.

ட்ரே சீலிங்கை வீடுகளில் அமைப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல..பெரும்பாலும் இதுபோன்ற சீலிங்கை வரவேற்பு அறை மற்றும் படுக்கை அறைகளில் அமைப்பதைப் பார்க்க முடியும். எந்த அறைகளில் இவற்றை அமைக்க இருக்கிறோமோ அந்த அறையின் நீள, அகலங்களை முறையாக அளந்து கொள்ள வேண்டும் . பின்பு, அந்த அறையின் வரைபடத்தை காகிதத்தில் வரைவது ட்ரே சீலிங்கை

அமைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ட்ரே சீலிங்கை எவ்வளவு கீழே அமைக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க, நீங்கள் அதை அமைக்க விரும்பும் இடத்திலிருந்து முடிக்கும் இடம் வரை அளவிட்டு அந்த அளவுகளை வரைபடத்தில் குறித்துக் கொள்ள வேண்டும்.இந்த அளவீடுகளை வைத்துக்கொண்டு, நீங்கள் வரைபடத்தில் ட்ரே சீலிங் அவுட்லைனை வரையத் தொடங்கலாம்.

மெல்லிய மரத் துண்டினால் கீற்று போல செய்யப்படும் பொருளை "ஃபர்ரிங் ஸ்ட்ரிப்ஸ்" என்று அழைக்கிறார்கள்.இந்த மெல்லிய மரக் கீற்றுகள் ட்ரே சீலிங்கை சமன்செய்து ஆதரிக்க உதவுவதற்காக அவுட்லைனுடன் அமைக்கப்படுகின்றன.உலர் சுவரானது இந்த மெல்லிய மரக்கீற்றுகளுடன் ஆணிகள் அல்லது திருகுகள்மூலம் இணைக்கப்படுகின்றன. உலர் சுவரை வைப்பதற்கு முன் அது நேராக இருக்கிறதா இல்லையா என்பதை சரி பார்த்து வைக்க வேண்டும்.

உலர் சுவர் வைத்தபிறகு, டைலிங், பெயிண்டிங், மோல்டிங் போன்ற இறுதிக்கட்ட வேலைகளைச் செய்யத் துவங்கலாம். உங்கள் தேவை மற்றும் கற்பனைத் திறனுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் ட்ரே சீலிங்கை அலங்கரிக்கலாம்.

பல வீடுகளில் ட்ரே சீலிங்கில் கண்கவர் அலங்கார விளக்குகளை அமைத்து அறைகளை மேலும் அழகு படுத்தி இருப்பதைப் பார்க்க முடியும்.

நன்மைகள்:

*உயரத்தை அதிகரிக்க;ட்ரே சீலிங் அமைக்கும் பொழுது மையப்பகுதியில் கூடுதல் ஆழம் இருப்பதால் அறையின் உயரம் அதிகமாவதோடு அறையின் அமைப்பையும் அதிகரிக்க உதவுகிறது.

*அறையின் அழகை மேம்படுத்த: ட்ரே சீலிங் அமைக்கப்படும் அறை விசாலமானதாகவும், பிரம்மாண்டமான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கின்றன.இதனால், அறையின் ஒட்டு மொத்த அழகை மேம்படுத்துவதில்

ட்ரே சீலிங் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுமட்டுமல்லாமல், உங்கள் வீட்டிற்கு ஒரு ஆடம்பரமான தோற்றத்தைத் தருகின்றது.

*மதிப்பு கூட்டுதல்: இதுபோன்று சீலிங் அமைக்கப்படும் வீடுகள் அதிக சூரிய ஒளி மற்றும் காற்றை வீட்டிற்குள் அனுமதிப்பதால் அவை வீட்டிற்கு அதிக மதிப்பை சேர்க்கின்றன.

* அதிக விளக்குகளை அமைப்பதற்கு அனுமதிக்கிறது: இவ்வகை சீலிங்கில் எல்இடி விளக்குகள், ஆக்ஸன்ட் விளக்குகள் மற்றும் ரெசஸ்டு விளக்குகள் போன்ற சிறப்பு ஒளியை வழங்குகின்ற விளக்குகளை அமைக்கலாம். இவ்வாறு அமைக்கப்படும் விளக்குகள் நாம் வாழும் இடத்தை மிகவும் பிரகாசமாக்கி ஒளி வெள்ளத்தில் வைத்திருக்க உதவுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ட்ரே சீலிங் என்பதை மறுக்க முடியாது. உங்கள் ரசனைக்கும் கற்பனைத் திறனுக்கும் ஏற்ப வெவ்வேறு வண்ணங்கள், அலங்காரங்கள் மற்றும் விளக்குகளை அமைத்து பார்டர்களுக்கு மிகவும் ஸ்டைலான தோற்றத்தைத் தந்து ட்ரே சீலிங்கை மிகவும் அட்டகாசமாக மாற்றலாம்.இதனால் வீட்டின் அறையானது மிகவும் அதிநவீன தோற்றத்தை தருவதோடு, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது..

* ட்ரே சீலிங் அமைப்பதன் நோக்கம்

வயரிங் மற்றும் பிளம்பிங்கை மறைத்து எடுத்துச் செல்வதற்கு ட்ரே சீலிங்கின் கீழ் தோன்றும் பார்டர் அமைப்பு உதவுகின்றது.. இதனால் அறையின் அழகு கெடாமல் வயரிங் மற்றும் பிளம்பிங் வேலைகளைச் செய்து கொள்ளமுடியும்.இது அறையின் அழகிய தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.


Next Story