வீட்டை அழகு படுத்தும் போன்சாய் (Bonsai ) மர வகைகள்


வீட்டை அழகு படுத்தும் போன்சாய் (Bonsai ) மர வகைகள்
x

மனிதர்களுக்கும் மரம், செடி கொடிகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. காரணம் அவை வெளியிடும் பிராணவாயுவை நாம் மூச்சுக் காற்றாக உள் வாங்குகிறோம். ஆனால் சில மரம் மற்றும் செடிகளிலிருந்து வெளிப்பாடு வாயுக்கள் மனிதர்களை கடுமையாக பாதிக்கும். வாஸ்து மரங்கள், மனிதர்களுக்கு உடல்நலத்தையும் பணவரவையும் உண்டாக்கும். இதனால் தான் வீட்டிற்குள் வாஸ்து மரங்களையும் செடிகளையும் வளர்ப்பது அவசியமாகிறது. இந்த மரங்களின் வடிவம் மாறாமல் அதன் கிளைகளை வெட்டி வளர்ச்சியை குறைக்கும் கலைக்கு பெயர் பொன்சாய் (Bonsai) என்பதாகும். அவை பார்ப்பதற்கு மிகச்சிறு மரம் போல் காட்சியளிக்கும். இவை வீட்டை அழகு படுத்தும். போன்சாய் கலை சீனாவில் உருவானது சீனாவிலிருந்து ஜப்பான் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு பரவி இன்றளவும் அவர்களால் விரும்பப்படுகிறது. வீட்டில் வளர்க்கும் போன்சாய் மரங்கள் பற்றி பார்ப்போம்.

சைனீஸ் இலம் (Chinese Elm) என்னும் மரம் போன்சாய் வாஸ்து உலகில் மிகவும் புகழ் பெற்றது. வீட்டிற்க்கு அழகு சேர்ப்பத்தோடு மனதை கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது.

பைன் போன்சாய் மரம்(Pine Bonsai Tree )

போன்சாய் கலாசாரத்திற்கு ஏற்ற மரம். இதை போன்சாய் விதிகளுக்கு ஏற்ப வெட்டி வீட்டில் வைத்து வளர்க்கலாம்.

போன்சாய் ஜேட் செடி (Bonsai Jade Plant)

போன்சாய் ஜேட் செடி பலராலும் விரும்பப்படும் பெங்ஷுய் (Fengshui) செடியாகும். இதை வெட்ட வெட்ட கணமாக வளரும், வடிவமும் மாறாது.

வில்லொவ் லீப் பைக்ஸ் (Willow Leaf Ficus )

போன்சாய் கலாசாரத்தின் மற்றோர் மரம் வில்லொவ் லீப் பைக்ஸ். இது பல வண்ணத்தில் கிடைக்கும். போன்சாய் வளர்ப்பின் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான மரம் என்றும் இதை கூறுவர்.

போனி டைல் பாம் (Ponytail Palm )

இது உண்மையில் பாம் (Palm) மரம் அல்ல. பார்ப்பதற்கு பாம் மரம் போல் இருப்பதால் இந்த பெயர் வந்தது. வீட்டை கவர்ச்சிகரமாக மாற்ற விரும்புவோர்க்கு மிகச் சிறப்பான தேர்வாகும்.

ஜாப்பனீஸ் மாபிள் (Japanese Maple )

போன்சாய் உலகில் இது புகழ் பெற்ற மரமாகும்.போன்சாய் ஆர்வலர்கள் பெரிதும் விரும்பும் மரமாகும். இதன் நிறமும், மாடல்களும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.

போதி மரம் (Bodhi Tree )

போதி மரத்தடியில் தான் புத்தர் ஞானம் அடைந்தார். போன்சாய் வாஸ்து படி இது ஒரு அதிர்ஷடமான மரமாகும். இதை வீட்டிற்குள் வளர்த்தால் பக்தி மயமான சூழலை உருவாக்கும்.


Next Story