மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்களா ?


மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்களா ?
x

இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்று காற்று மாசுபாட்டைச் சொல்லலாம்.நாம் சாதாரணமாக உபயோகிக்கக்கூடிய செங்கற்களைப் போலல்லாமல் மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்கள் தயாரிக்கப்படும் பொழுது அது மாசுபாட்டை உருவாக்காது.மேலும், இவ்வகை செங்கற்கள் காற்று மாசுபாட்டை குறைக்கும் மாற்றுப் பொருள் என்றும் சொல்லலாம். இதுபோன்ற செங்கற்களை “ சுவாச செங்கற்கள்” என்றும் அழைக்கிறார்கள்.

இவ்வகை செங்கற்கள் காற்றை வடிகட்டுவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றன.இது வெளிப்புற காற்றை வடிகட்டி கட்டமைப்புகளின் உட்புறத்திற்கு வழங்குகிறது.இவை காற்றை வடிகட்டுவதுடன் மாசுபடுத்திகள் மற்றும் தூசி போன்ற பிற துகள்களைப் பிரிக்கின்றன. கட்டிடத்தின் காற்றோட்ட அமைப்பின் ஒரு அங்கமாக செங்கலை செயல்படுத்துவது என்பதே இதன் நோக்கமாகும்.

மாசுபாட்டை உறிஞ்சக்கூடிய இந்த செங்கற்கள் நுண்ணிய கான்கிரீட் தொகுதி வடிவத்தில் வடிவமைக்கப்படுகின்றன.குறிப்பாக, கற்களின் உள்ளே காற்றோட்டமானது உள்ளே இயங்கும் வகையில் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.கட்டமைப்பு வலுவூட்டலுக்காக ஷாப்ட்கள் இந்தக் கற்களின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன.மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினாலான ஒரு கப்ளர் இரண்டு செங்கற்களுக்கு இடையில் வழங்கப்படுகிறது.

செங்கலின் வடிகட்டுதல் திறனைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்படி, செங்கற்கள், புகை அல்லது மூடுபனிக்கு சமமான ,2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட 30 சதவிகித துகள்களை வடிகட்டுகின்றன என்று ஊகிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் இது 10 மைக்ரானுக்கு மேல் விட்டம் கொண்ட 100 சதவிகித கரடுமுரடான துகள்களை வடிகட்டுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்களின் நன்மைகள்

* இந்தக் கற்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆற்றல் குறைவாக இருப்பதற்கு காரணம் வேறு எந்த இயந்திர கூறுகளையும் பயன்படுத்தாததே ஆகும்-

* பெரிய அளவில் பயன்படுத்தப்படும் இயந்திர காற்று வடிகட்டுதல் நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்களின் விலை மலிவானதாக உள்ளது.

* இவை நிலையானதாகவும், சுற்றுச் சூழல் நட்பு கொண்டவையாகும் உள்ளன.

* திறமையான தொழிலாளர்களைக் கொண்டு இந்த கற்களை கட்ட வேண்டிய அவசியமில்லை..இந்த அடிப்படையிலும் இது செலவை குறைப்பதாக இருக்கின்றது..

இது வீட்டின் வெளிப்புறச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், முற்றம்,விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவர்கள் போன்ற வெளிப்புறச் சுவர்களைக் கட்டுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.


Next Story