களிமண் ஓடுகள் தட்பவெட்ப சூழலுக்கு உகந்தது


களிமண் ஓடுகள் தட்பவெட்ப சூழலுக்கு உகந்தது
x

சூடு, ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியினால் பாதிப்பில்லை. களிமண் கொண்டு செய்யப்படும் ஓடுகள் எல்லாவிதமான தட்பவெட்ப சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றது. வெயில் காலங்களில் ஓட்டு வீட்டிற்குள் குளிர்ச்சியாகவே இருக்கும். அதே போல் மழைக்காலங்களில் அதிகப்படியான குளிர்ச்சி இல்லாமல் வெதுவெதுப்பாகவே வைத்திருக்கும். எனவே இந்த ஓடுகள் எல்லாவிதமான தட்பவெட்ப சூழலுக்கும் உகந்ததாக இருப்பதால் தட்பவெட்பத்தை குறைக்க கூட்டக்கூடிய மின் சாதனங்களுக்கான கட்டணங்கள் நமக்கு குறைவாகவே இருக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

இயற்கையாக கிடைக்கக்கூடிய களிமண் ஓடுகளாக தயார் செய்து சுட்டு எடுத்து உபயோகப்படுத்தப்படுகிறது. இயற்கை பொருள் என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. இதில் எந்த விதமான உடலுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய ரசாயனங்கள் இல்லை. எனவே பலர் மழைக்காலங்களில் ஒரு சில நாட்களுக்குப் பிறகு இந்த ஓடுகளில் விழுந்து கீழே ஒழுகும் மழை நீரை பானைகளில் பிடித்து சேமித்து வைத்துக் கொள்வதும் உண்டு. முதல் சில நாட்களில் இந்த ஓடுகளின் மேல் இருக்கும் தூசியும் மண்ணும் அடித்த செல்லப்பட்டு பின்பு வரும் தண்ணீர், குடிப்பதற்கு உகந்ததாக இருப்பதால் இந்த முறையில் பல கிராமங்களிலும் மழை நீர் சேமிப்பிற்கு உதவுவதாக களிமண் ஓடுகள் இருக்கின்றன.

நீடித்து உழக்ககூடியது

களிமண் ஓடுகளை ஒரு முறை வீட்டிற்கு வேய்ந்து விட்டால், ஆயுள் முழுவதும் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஓரிரண்டு ஓடுகள் மட்டும் ஏதேனும் காரணத்தால் உடைந்து விடுமானால் அந்த ஓடுகளை மட்டும் மாற்றிக் கொண்டால் போதுமானது. தன்னுடைய நிறத்திலும் வடிவத்திலும் எந்த விதமான மாற்றமும் இன்றி காலாகாலத்திற்கும் நீடித்து நிலைக்கக் கூடியது களிமண் ஓடுகள்.


Next Story