வீட்டிற்கு அவசியமான பாதுகாப்பு பெட்டகங்கள் (சேஃப்டி லாக்கர்ஸ்)


வீட்டிற்கு அவசியமான பாதுகாப்பு பெட்டகங்கள் (சேஃப்டி லாக்கர்ஸ்)
x

வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான வீட்டு உபயோகப் பொருட்களின் வரிசையில் இப்பொழுது சேஃப்டி லாக்கர்களும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொருவரும் தங்களது பணம் மற்றும் நகைகளை பேங்க் லாக்கரில் வைத்தாலும் வீடுகளிலும் சில நேரங்களில் இவற்றை வைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும், நினைத்த நேரத்தில் பேங்க் லாக்கருக்குச் சென்று நகைகளை எடுத்து வருவதோ, அதேபோல் ஒவ்வொரு முறையும் அவசியமான நகை மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்து வருவதற்கென்று பேங்கிற்கு சென்று வருவதோ இயலாத காரியமாகும்.மேலும், வீட்டில் ஏதாவது தீவிபத்து ஏற்பட்டாலோ அல்லது அதிக மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ நாம் வைத்திருக்கும் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைப்பதற்கு மிகச்சரியான பாதுகாப்பு என்றால் அது வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய சேஃப்டி லாக்கர்களாகத்தான் இருக்க முடியும்.இதுமட்டுமல்லாமல் திருட்டு பயம் இல்லாமல் நகைகளை வீட்டில் வைத்திருப்பதற்கும் உரிய பாதுகாப்பு அளித்து உதவுவதில் இந்த லாக்கர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

வீட்டில் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு என்று பலவிதமான பாதுகாப்பு பெட்டகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.மெக்கானிக்கல் மற்றும் டிஜிட்டல் செக்யூரிட்டி லாக்கர்களே பெருமளவில் வீடுகளில் உபயோகப்படுத்தப் படுகின்றன.மெக்கானிக்கல் சேஃப்கள் என்பது வீடுகள் மற்றும் நகைக்கடைகள் இரண்டிலும் காணப்படும் பாரம்பரிய மாதிரிகள் ஆகும்.டிஜிட்டல் பாதுகாப்புகள் உங்கள் ஆவணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பதற்கான நவீன தீர்வாகும்.

லாக்கர் வகைகள்

பயோமெட்ரிக் சேஃப்டி லாக்கர்

டபுள் டோர் சேஃப் இன் சேஃப்

இரட்டை சுவர் தீ தடுப்பு பாதுகாப்பு லாக்கர்கள்

மின்னணு லாக்கர்கள்

தீ தடுப்பு லாக்கர்கள்

ஃப்ளோர் ஃபிக்ஸிங் லாக்கர்ஸ்

உண்டியல் லாக்கர்கள்

இயந்திர லாக்கர்கள்

மினி பயோமெட்ரிக் லாக்கர்கள்

பெட்ரோல் நிலைய லாக்கர்கள்

சிறிய அளவிலான மின்னணு லாக்கர்கள்

இரட்டை பாதுகாப்பு லாக்கர்கள்

வாஸ்து லாக்கர்ஸ்

பயோமெட்ரிக் சேஃப்களின் சிறப்பம்சங்கள்

பயோமெட்ரிக் மற்றும் கடவுச்சொல்(பாஸ்வேர்டு) பூட்டுதல் அமைப்பு

25 தனித்தனி கைரேகைகள்

20 கடவுச்சொற்கள்

இரட்டைக் காவல் செயல்பாடுகள்

நிர்வாக கட்டுப்பாட்டு செயல்பாடுகள்

தணிக்கை சோதனை

முழுமையாக தூள் பூசப்பட்டது

அலமாரியில் பொருத்திக்கொள்ளும் வசதி

உள்ளமைக்கப்பட்ட அலாரம்

குறைந்த மின் நுகர்வு

அவசர சாவி வசதி

நான்- வொலடைல் மெமரி

மின்னணு லாக்கர்களின் சிறப்பம்சங்கள்

மின்னணு பூட்டுதல் அமைப்பு

கூடுதலாக கைகளால் திறக்க கூடிய சாவி

3 பெட்டிகளுடன் 2 அலமாரிகள்

கடவுச்சொல் - 2 தனித்தனி ரகசிய கடவுச்சொற்கள்

முழுமையாக தூள் பூசப்பட்டது

அலமாரியில் பொருத்திக் கொள்ளும் வசதி

உள்ளமைக்கப்பட்ட அலாரம்

இரட்டை நபர்கள் உபயோகப்படுத்தும் வசதி

நேர தாமத விருப்பம்

குறைந்த பேட்டரி அறிகுறி

குறைந்த மின் நுகர்வு

அவசர சாவி வசதி

நான்- வொலடைல் மெமரி

மெக்கானிக்கல் லாக்கர்கள்

பிரதான கதவு ஒன்றைக் கொண்டு பாதுகாக்கப்படுகிறது,பிரதான சாவி மெக்கானிசத்துடன் டூயல் கண்ட்ரோல் லாக் அன்பிக்.(அசல் சாவிகள் தொலைந்து போனாலும், மற்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டாலும்

முதன்மை சாவிகள் அங்கீகரிக்கப்படாத நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கும்). வலுவான மற்றும் உறுதியான முழு தூள் பூசப்பட்டது.நூறு சதவிகிதம் இரும்பினால் செய்யப்பட்டது..திருட்டு பயமற்றது.

அளவுகள்

2.7 லிட்டர்,10 லிட்டர்,15 லிட்டர், 40 லிட்டர், நாற்பத்தொரு லிட்டர், 50.9 லிட்டர் என பல அளவுகளில் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய லாக்கர்கள் கிடைக்கின்றன..லாக்கர்களின் அளவு அதிகரிக்கும் பொழுது அதன் உட்புறம் நகை, பணம், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை வைத்துக் கொள்ள முடியும்.இதுபோன்ற லாக்கர்களில் அலார வசதி இருப்பதால் தப்பான நபர்கள் தவறாகக் கையாளும் பொழுதோ அல்லது நாமே தப்பான கடவுச்சொற்களை போடும் பொழுதோ இவை நமக்கு தெரிவித்துவிடும்.பெரும்பாலான லாக்கர்களில் டிஜிட்டல் கீபேட் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே வசதி இருப்பதால் எளிதாக கையாள்வதற்கு உதவுகின்றன.

எப்பொழுதுமே நம்முடைய விலைமதிப்பற்ற பொருட்கள், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வீடு அல்லது வங்கி லாக்கர் என ஒரே இடத்தில் வைக்காமல் பல இடங்களில் பிரித்து வைத்து பாதுகாப்பது சிறந்ததாகும்.


Next Story