ப்ளஷ் டோர் அழகிய தோற்றம், நீடித்த ஆயுள், சிக்கன விலை


ப்ளஷ் டோர் அழகிய தோற்றம், நீடித்த ஆயுள், சிக்கன விலை
x

உங்கள் வீட்டிற்கு பொருத்தமான, எளிமையான, ஸ்டைலான, உறுதியான கதவை அமைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கான தேர்வு ஃப்ளஷ் டோர். வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் மற்றும் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய வாயில்களில் உள்ள இடங்களிலும் இந்த பிளாஷ் டோர் உபயோகப்படுத்தப்படுகிறது.

தோற்றம்:

ஃப்ளஷ் டோர் நவீன வீடுகளுக்கும் பாரம்பரிய வீடுகளுக்கும் ஒருசேர பொருந்தக் கூடியது. பார்க்க எளிமையாகவும் நளினமாகவும் அதே நேரத்தில் ஸ்டைலான தோற்றத்தையும் அளிக்கக் கூடியது இந்த கதவுகள். இவற்றின் விலை சிக்கனமானது என்பது கூடுதல் சிறப்பு.

நீடித்து உழைத்தல்:

நாம் வீடுகளுக்கு கதவை தேர்வு செய்யும் பொழுது அது நீடித்து உழைக்கக் கூடியதாகவும் வலிமையானதாகவும் இருக்க வேண்டும் என்றே நினைப்போம். அந்த வகையில் ஃப்ளஷ் டோர்கள் பல வருடங்களுக்கு நீடித்து உழைக்கக் கூடியவை. உறுதியான கட்டிடங்களில் இவற்றை பொருத்தும் போது தினசரி உபயோகத்தினால் பாதிக்கப்படாமல், ஈரப்பதத்தினால் மற்றும் தட்பவெப்பங்களால் பாதிக்கப்படாமல் உழைக்கக் கூடியது. இந்த ஃப்ளஷ் டோர்கள் சாலிட் உட், ஹார்ட் உட், பார்ட்டிகல் போர்டு மற்றும் மீடியம் டென்சிட்டி பைபர் போர்டு(MDF) என்று பல வகைப்படும். இதில் பொதுவாக பலரும் விரும்புவது அதிக உறுதியும் நீடித்த உழைப்பும் கொண்ட சாலிட்வுட் கதவுகளே. இந்த கதவுகளுக்கு ஓக், பைன் மற்றும் செர்ரி மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வழுவழுப்பான மேற்புறத்தைக் கொண்டது. பளபளப்பு கூடுதலாக இருப்பதால் அழுக்கு மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கக் கூடியது, ஹார்ட்வுட் பிளைவுட் என்பது சாலிட் உட்டை விட சற்றே விலை குறைவானது என்றாலும் உறுதியும் நீடித்த உழைப்பும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பார்ட்டிகள் போர்டு மற்றும் எம்டிஎஃப் என்பதும் ஈரப்பதத்தை எதிர்க்கக் கூடியதும் நீடித்து உழைக்கக் கூடியதும் ஆகும் என்றாலும் இவை இரண்டும் முந்தைய இரண்டையும் விட மேலும் விலை குறைவானது. ஆனால் இந்த ஃப்ளஷ் டோரில் எந்த வகையை நாம் தேர்ந்தெடுத்தாலும் அதில் பல்வேறு டிசைன்கள் நமக்கு கிடைக்கும். இந்த ஃப்ளஷ் டோர்களின் உள்ளே ஸ்டீல் ஃப்ரேம் கொடுக்கப்பட்டிருப்பதால் அது அதிக அளவிலான உறுதியையும் வலிமையையும் கதவுகளுக்கு வழங்குகிறது. இதனாலேயே அதிகம் பேர் வந்து செல்லக்கூடிய வாயில்களில் குறிப்பாக வணிக வளாகங்களில் இந்த கதவுகள் அமைக்கப்பட்டாலும் அவ்வளவு எளிதில் பழுதாவது இல்லை.

பிளஸ் டோர்கள் எல்லாமே விலையில் சிக்கனமானவை தான். இருந்தாலும் ஃப்ரெஞ்சு டோர் வகைகள் விலை இன்னும் சற்று குறைவாகவே இருக்கும். ஃப்ளஷ் டோர்களின் விலை குறைவானதாக இருந்தாலும் அவற்றின் தோற்றமும் உழைப்பும் நீடித்து இருக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃப்ளஷ் டோர்களை நமக்கு பிடித்த வண்ணங்களிலும் வடிவங்களிலும் நம் வீட்டிற்கு ஏற்றபடியும் வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த பிளஸ் டோர்களை பராமரிப்பது மிகவும் சுலபம் தனிப்பட்ட கவனமும் பராமரிப்போ இதற்கு தேவையில்லை இந்த கதவுகள் அதிகபட்ச தட்பவெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படுவதில்லை. இவற்றில் அழுக்கு படிந்தாலும் ஈரத் துணியைக் கொண்டு துடைத்து விட்டால் புதிது போலவே தோற்றமளிக்கும்.

ஃப்ளஷ் டோர்கள் மரம், ஃபைபர் கிளாஸ், உலோகம், வினைல் மற்றும் பல கூட்டுப் பொருட்களாலும் தயாரிக்கப்படுகின்றன. இந்த கதவுகளை வீடுகளின் எல்லா அறைகளுக்கும் படுக்கையறை குளியல்அறை சமையலறை வரவேற்பறை என்று எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் பல அளவுகளிலும் நிறங்களிலும், டிசைன்களிலும் கிடைக்கின்றன. இந்த கதவுகளை நவீன வீடுகளுக்கும் புராதன வீடுகளுக்கும் என்று எவற்றிற்கு வேண்டுமானாலும் தேர்வு செய்து பயன்படுத்தலாம். இந்த கதவுகளுக்கான பூட்டுகள், கதவு பிடிகள் போன்றவை பல டிசைன்களிலும் வண்ணங்களிலும் நல்ல பிராண்டுகளில் கிடைக்கின்றன. எனவே இவற்றின் பயன்பாடு சுலபமானதே

ஃப்ளஷ் டோர்கள் சாலிட் உட் போன்றவற்றில் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இந்த கதவுகளை வார்னிஷ் செய்து பயன்படுத்துவதோ பெயிண்ட் அடித்து பயன்படுத்துவதோ எதுவானாலும் அழகான தோற்றத்தை கொடுக்கக் கூடியது. இந்த கதவுகளில் நான்கு பாகங்கள் கொண்ட கதவாகவோ அல்லது குடைசல் வேலை செய்யப்பட்ட கதவாகவோ தயார் செய்து நாம் பயன்படுத்தலாம்.

கண்ணாடியினால் ஆன ஃப்ளஷ் டோர்கள் பலரும் விரும்பக்கூடிய மற்றொரு தேர்வு. இந்த கதவுகளில் வெளிச்சம், கதவின் மறுபுறம் இருப்பவர்களை பார்க்க கூடிய வசதி போன்றவை கிடைக்கிறது. வீடுகளிலும் கடைகளிலும் இவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்த கண்ணாடி கதவுகளில் துல்லியமான க்ளியர் கிளாஸ், மங்கலான வெளிச்சத்தை கொடுக்கக்கூடிய ஃப்ராஸ்டட் கிளாஸ், பல வண்ணங்கள் கொண்ட ஸ்டெயின்ட் கிளாஸ் மற்றும் டிசைன்கள் கொண்ட பிவெல்டு கிளாஸ் என்று கண்ணாடி ஃப்ளஷ் டோர்களில் பல டிசைன்கள் உண்டு. இந்த கண்ணாடி ஃப்ளஷ் டோர்களுக்கு வெளிப்புற ஃப்ரேம் அலுமினியம், வினைல், மற்றும் மரம் உபயோகப்படுத்தப்படுகிறது.

பைபர் கிளாஸ் ஃப்ளஷ் டோர் தற்போதை காலகட்டத்தில் பலரும் பயன்படுத்துகின்றனர். இது குறைவான பராமரிப்பும் நீடித்த உழைப்பும் கொண்டது. பைபர் கிளாஸ் ஃப்ளஷ் டோர் பலவித கூட்டு பொருட்களின் தயாரிப்பு என்பதாகும். இதனால், இவை பல ரசாயனங்களுக்கும் தட்பவெப்பங்களுக்கும் எதிர்ப்பு கொண்டதாக இருக்கிறது. இவற்றின் வழுவழுப்பான வெளிப்புறமும் மரத்தின் டிசைன் கொண்ட தோற்றமும் மிகவும் கவர்ச்சியான வடிவமைப்பை கொடுக்கிறது.

மொத்தத்தில் இந்த ஃப்ளஷ் டோர்கள் எந்த பொருட்களால் செய்யப்பட்டதாக இருந்தாலும் அவற்றின் அழகும் ஆயுளும் குறைவான பராமரிப்பும் சிக்கனமான விலையும் எல்லா வீடுகளுக்கும் இவை பொருத்தமான தேர்வாக இருக்கிறது என்பதே உண்மை.


Next Story