பசுமை கான்கிரீட்


பசுமை கான்கிரீட்
x

பசுமை கான்கிரீட் என்பது தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான துறைகளில் வரும் கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் ஒரு விதமானபொருள் தான் பசுமை கான்கீரிட் என குறிப்பிடப்படுகிறது.

இதை கண்டு பிடித்தவர் டாக்டர் பௌயஸ்ஸி ஆவார். கட்டுமான பணிகளின் போது வரும் உள்ள கழிவுகள் மற்றும் இடித்த உடைப்பு பொருள்களை அகற்றி அவற்றை மறுசுழற்சி செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. மறுசுழற்சி செய்வதன் மூலம் பொருட்களின் மதிப்பு கூட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது.

பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாப்பதற்காக இது போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. கொட்டப்பட்ட குப்பைகளும் இது போன்ற கட்டுமான பணிகளில் அகற்றப்பட்ட கழிவுகளும் மறுசுழற்சி செய்வதற்கு இன்று பல நவீன முறைகள் கையாளப்படுகின்றன.

கசடு, மின் உற்பத்தி நிலைய கழிவுகள், சுரங்க மற்றும் குவாரி கழிவுகள், கழிவு கண்ணாடி, எரியூட்டி எச்சங்கள், சிவப்பு மண், எரிந்த களிமண், மரத்தூள், எரிப்பு சாம்பல் மற்றும் ஃபவுண்டரி மணல் போன்றவைகளும் மறு சுழற்சி செய்ய படுகிறது.

சுற்றுப்புறத் தூய்மை காரணமாகவும் இந்த மறு சுழற்சி மற்றும் மதிப்பு கூட்டப் பொருள்களின் பயன்பாடுகள் பிரபலம் ஆகி வருகிறது. மறுசுழற்சி தொழில்கள் பல மிகக் குறைந்த விலையில் உள்ள கழிவுகளை சாலைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தரமான கட்டுமான பொருள்களாக மாற்றுகின்றன.

மொத்தமாக மண்ணிரப்புதல், சாலைகள், கரை பாதுகாப்பு, வடிகால் கட்டமைப்புகள் மற்றும் சாக்கடைகள் போன்றவற்றிற்கு பசுமை கான்கிரீட் பயன்படுகிறது. கரடு முரடான நொறுக்கப்பட்ட கழிவுகளில் இருந்து 30% மறுசுழற்சி செய்து கான்கிரீட் ஆக மாற்றுகிறார்கள்.

சாலைகள், நடைபாதைகள், வடிகால் இடங்கள், தோட்டம், விளையாட்டு தளங்கள் மைதானங்களின் அடுக்கு, தோட்ட சுவர்களுக்கு கீழே உள்ள நிலவேலைப்பாடு, பள்ளங்கள் மற்றும் பணியிடங்களை நிரப்புதல் போன்றவைகளில் மண்ணின் திறனை மேம்படுத்துகிறது.

பெரிய கட்டுமான பணிகள், பாலங்கள் மற்றும் அணைகள் கட்டுவதற்கும் பயன்படுகிறது.

டைல், கான்க்ரீட் ஜாலி, கான்கிரீட் பிளாக், சுவர் உறை, வேலி போஸ்ட், காம்பவுண்ட் சுவர், பிளான்டர், நடைபாதை, வடிகால் கவர், பார்க் பெஞ்சுகள், சட்டசபை கழிப்பறைகள் மற்றும் பிற சிறிய கட்டமைப்புகள் போன்ற சிவில் இன்ஜினியரிங் பணிகளில் பசுமை கான்கிரீட் பொருள் தேர்வு செய்ப்படுகிறது.

கட்டுமானம் மற்றும் இடிப்புக் கழிவுப் பொருட்களில் பெரும்பாலும் உலோகங்கள், மரம், கடினப் பலகை, பிளாஸ்டிக், காகிதங்கள் போன்ற பொருட்கள் இருக்கும்.

போக்குவரத்துக் காரணமாக ஆற்று மணல் விலை உயர்ந்ததுள்ளது. ஆற்று மணல் கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய கலவையாகும், தற்போது பல பகுதிகளில் மணல் பற்றாக்குறையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குவாரி பாறை தூசி ஆற்று மணலுக்கு பொருளாதார மாற்றாக இருக்கிறது.

தயாரிக்கப்பட்ட மணல் என்று அழைக்கப்படும் குவாரி பாறை தூசியின் பயன்பாடு கட்டுமானப் பொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.சல்பேட் தாக்குதல் மற்றும் அமிலத் தாக்குதலின் கீழ் குவாரி டஸ்ட் கான்கிரீட்டில் நீடித்து நிலைத்திருக்கிறது.

சிமென்ட் கான்கிரீட்டிற்கு (பிசிசி) பதிலாக ஃப்ளை ஆஷ் கான்கிரீட்டைப் பயன்படுத்துவது சிமெண்ட் மற்றும் எரிசக்தி நுகர்வில் சேமிப்பை தருவதோடு பொருளாதாரத்தையும் அளிக்கும்.

வழக்கமான கான்கிரீட்டுடன் ஒப்பிடும்போது பசுமை கான்கிரீட் தயாரிப்பதற்கு அதிக மாற்றம் தேவையில்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிறது.

பசுமை கான்கிரீட் நல்ல வெப்பம் மற்றும் அமில எதிர்ப்பு தன்மை உள்ளது. கான்கிரீட்டை விட மிகவும் சிக்கனமானது. மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் அருகாமையிலிருந்து எடுக்கப்படுகிறது.

பசுமை கான்கிரீட்டின் நீரேற்றத்தின் வெப்பம் பாரம்பரிய கான்கிரீட்டை விட குறைவாக உள்ளது, இதன் விளைவாக குறைந்த வெப்பநிலை உயர்கிறது.

பசுமை கான்கிரீட் தொழில்துறையின் CO2-உமிழ்வை 30% வரை குறைக்கிறது. கான்கிரீட் தொழில்துறையின் கழிவுப் பொருட்களின் பயன்பாடு 20% அதிகரித்துள்ளது.

பசுமை கான்கிரீட் கட்டமைப்பின் எடையை குறைப்பதால் கையாளுவது எளிதாகிறது. நெகிழ்வுத்தன்மையை உயர்ந்து சிமெண்டின் மொத்த நுகர்வை குறைக்க உதவுகிறது.

பசுமை கான்கிரீட்க்கு குறைந்த பராமரிப்பே போதுமானது. பசுமை கான்கிரீட் சிறந்த வேலைத்திறன் கொண்டது. குப்பைகளைக் குறைக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடியதை அதிகரிக்கவும். கான்கிரீட் குப்பைகளை சேமித்து, தனித்தனியாக செயலாக்கப்பட்டு RCA களைப் பெறலாம்.

காற்று, நீர் மற்றும் சத்தம் மாசு படாமல் சுற்றுச்சூழல் விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தர மதிப்பீடு மற்றும் சான்றளிதழ்களை கட்டாயமாக்க வேண்டும். அவற்றை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கப்பட வேண்டும்.


Next Story