தொடர் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் வணிகம்


தொடர் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் வணிகம்
x

ரியல் எஸ்டேட் வணிகம் 2022 இல் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டு பெற்ற உச்சத்தை 2023 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் வணிகம், வீடுகள் விற்பனை செய்வதில் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நெருக்கடிகள் இருந்த பொழுதும் இத்தகைய வளர்ச்சி அடைந்திருப்பதுரியல் எஸ்டேட் வணிகம் 2022 இல் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டு பெற்ற உச்சத்தை 2023 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் வணிகம், வீடுகள் விற்பனை செய்வதில் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

னை இந்தியாவின் முக்கிய நகரங்களோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது என்றாலும் பல முக்கிய பிரச்சனைகளில் வணிக சந்தை இருந்த போதிலும் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தங்கள் முதலீட்டை அதிக அளவில் 2023 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மக்களை ஒரு நீண்டகால முதலீட்டுக்கு சிந்திக்க வைத்துள்ளது.

மேலும் தற்போதைய மாறிவரும் வாழ்வியல் மாற்றங்களும் தனி வீடு, பண்ணை வீடு, மனை மற்றும் விவசாய நிலங்களில் முதலீடு என்கின்ற மனோபாவத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இவையும் பெருநகரங்கள், நகரங்கள் போன்றவற்றில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்வதோடு நகரின் புறப்பகுதிகள், கிராமங்கள் நோக்கி முதலீட்டார்கள் பார்வை செல்லுகிறது. மேலும் ஒவ்வொருவரும் நகரத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த இடத்தில் வீட்டுமனை வீடு வாங்குவதைவிட வரும் காலங்களில் பெரிதும் வளர்ச்சி அடையக்கூடிய ஊராட்சி நகராட்சி கிராமப்புறங்களில் வீடு, வீட்டு மனை வாங்குவதை விரும்புகின்றனர். இத்தகைய மனநிலை முதலீடு செய்பவர்களை அதிக அளவிற்கு ரியல் எஸ்டேட் வணிகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் காரணிகளாக அமைந்துள்ளது. எனவே 2023 எத்தகைய மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story