உலக கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று ஆட்டம் பெங்களூருவில் நடக்கிறது.


உலக கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று ஆட்டம் பெங்களூருவில் நடக்கிறது.
x
தினத்தந்தி 21 Feb 2018 4:45 AM IST (Updated: 21 Feb 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை கூடைப்பந்து போட்டி அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கிறது

பெங்களூரு,

உலக கோப்பை கூடைப்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2019) ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் சீனாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதில் இரண்டு ஆட்டங்கள் பெங்களூருவில் நடக்கிறது. பெங்களூரு கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஜோர்டான் அணியும், 26-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-லெபனான் அணியும் மோதுகின்றன. இந்த தகவலை இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.

Next Story