மாநில கூடைப்பந்து: தமிழக ஜூனியர் பெண்கள் அணி வெற்றி


மாநில கூடைப்பந்து: தமிழக ஜூனியர் பெண்கள் அணி வெற்றி
x
தினத்தந்தி 30 Nov 2021 3:44 AM IST (Updated: 30 Nov 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை, 

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்க ஜூனியர் அணி 72-58 என்ற புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி. (கோவை) அணியை தோற்கடித்தது. ஜூனியர் அணியில் சத்யா 29 புள்ளியும், ஏஞ்சல் 15 புள்ளியும் சேர்த்தனர். 

மற்ற ஆட்டங்களில் அர்பன் அணி 70-53 என்ற புள்ளி கணக்கில் அல்வெர்னியாவையும், இந்துஸ்தான் ஜாமெர்ஸ் 53-15 என்ற புள்ளி கணக்கில் ஆயுதப்படை போலீஸ் அணியையும் விரட்டியடித்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி 95-46 என்ற புள்ளி கணக்கில் யங்ஸ்டர்ஸ் (திண்டுக்கல்) அணியை துவம்சம் செய்தது. சத்யபாமா அணி 86-72 என்ற புள்ளி கணக்கில் ஜேப்பியார் அணியை வென்றது.

Next Story