ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி
x

54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மும்பை,

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ஆஷ்லி கார்ட்னெர் (66 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (64 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 197 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 53 ரன்கள் எடுத்தார். ஸ்மிர்தி மந்தனா (4 ரன்), ஷபாலி வர்மா (13 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (12 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா 2-வது ஆட்டத்தில் மட்டும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது.


Next Story