20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்


20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்
x

பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார்.

துபாய்,

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி 20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (836 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.

இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானை (694 புள்ளி) பின்னுக்கு தள்ளி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (695 புள்ளி) மறுபடியும் முதலிடத்தை அடைந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் ரஷித் கான் 4 விக்கெட் மட்டுமே எடுத்ததால் 4 புள்ளிகள் குறைந்து முதலிடத்தை இழக்க வேண்டியதாகி விட்டது.


Next Story