20 ஓவர் கிரிக்கெட்: ஸ்ரீஹெர் அணி 'சாம்பியன்'


20 ஓவர் கிரிக்கெட்: ஸ்ரீஹெர் அணி சாம்பியன்
x

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்லூரி அணிகளுக்கான டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மார் கிரிகோரிஸ்-ஸ்ரீஹெர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மார் கிரிகோரிஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ஷபியுல்லா 61 ரன்னும், கணேஷ் கார்த்திகேயன் ஆட்டம் இழக்காமல் 51 ரன்னும் சேர்த்தனர்.

பின்னர் ஆடிய ஸ்ரீஹெர் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதிகபட்சமாக நிஹல் சின்னதுரை 82 ரன்னும், ஸ்ரீசரண் ஆட்டம் இழக்காமல் 45 ரன்னும் எடுத்தனர். ஸ்ரீஹெர் அணி வீரர்கள் நிஹல் சின்னதுரை தொடர்நாயகனாகவும், ஹரி கிர்தன் சிறந்த பேட்ஸ்மேனாகவும், மணிபாரதி சிறந்த பந்து வீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பரிசளிப்பு விழாவில் மேக்னா கல்லூரி சேர்மன் தேவதாஸ் நாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் என்.ஸ்ரீனிவாசராவ், செயலாளர் கே.முரளி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story