20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஸ்ரீஹெர் அணி


20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஸ்ரீஹெர் அணி
x

கோப்புப்படம் 

திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியது.

சென்னை,

திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் மார் கிரிகோரிஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் எல்.ஜி.பொன்னேரி அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரைஇறுதியில் ஸ்ரீஹெர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்து கல்லூரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


Next Story