கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 356 ரன்கள் குவிப்பு + "||" + Training Cricket against India Cricket: Australian Cricket Board's Eleven team scored 356 runs

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 356 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 356 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.
சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பிரித்வி ஷா, புஜாரா, கேப்டன் விராட்கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி தரப்பில் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து இருந்தது. டார்சி ஷார்ட் 10 ரன்னுடனும், மேக்ஸ் பிரியான்ட் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய டார்சி ஷார்ட், மேக்ஸ் பிரியான்ட் ஆகியோர் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி வீரர்கள் வேகமாக ரன் குவிப்பதை தடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 114 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அஸ்வின் பந்து வீச்சில் மேக்ஸ் பிரியான்ட் (62 ரன்கள், 65 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) போல்டு ஆனார். நிலைத்து நின்று ஆடிய டார்சி ஷார்ட் 91 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் சாம் ஒயிட்மேன் 35 ரன்னிலும், பாரம் உப்பல் 5 ரன்னிலும், ஜாக் கார்டெர் 38 ரன்னிலும், ஜோனதன் மெர்லோ 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 7-வது விக்கெட்டுக்கு ஆரோன் ஹார்டி, ஹார்ரி நீல்செனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக விளையாடி விக்கெட் சரிவை தடுத்தது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. ஹார்ரி நீல்சென் 56 ரன்னுடனும், ஆரோன் ஹார்டி 69 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்திய வீரர்களின் பந்து வீச்சு எடுபடாததால் கேப்டன் விராட்கோலியும் 2 ஓவர்கள் பந்து வீசினார். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.