உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு - தெண்டுல்கர்


உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு - தெண்டுல்கர்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:52 AM IST (Updated: 4 Feb 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலகின் எந்த நாட்டிலும், எத்தகைய ஆடுகளத்திலும் சவால் கொடுக்கக்கூடிய அளவுக்கு மிக கச்சிதமான கலவையில் அமைந்துள்ள அணியாக இந்தியா விளங்குகிறது. உலக கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு என்பதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் போட்டியில் தொடக்கத்திலேயே உத்வேகம் பெறுவதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது.

இந்த உலக கோப்பை போட்டியில் கடுமையான போட்டியாளராக இங்கிலாந்து அணி இருக்கும் என்று மதிப்பிடுகிறேன். அதே சமயம் நியூசிலாந்தையும் விட்டு விட முடியாது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர்கள் தடுமாறினாலும் சிறந்த அணியாகவே இருக்கிறார்கள். ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பும் போது ஆஸ்திரேலியாவும் பலம் பொருந்திய அணியாக மாறி விடும். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Next Story