பேட்டி கொடுக்க மறுத்து தப்பி ஓடிய டோனி


பேட்டி கொடுக்க மறுத்து தப்பி ஓடிய டோனி
x
தினத்தந்தி 5 Feb 2019 11:29 AM IST (Updated: 5 Feb 2019 11:29 AM IST)
t-max-icont-min-icon

சகால் டிவிக்கு பேட்டி கொடுக்க மறுத்து டோனி தப்பி ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


இந்திய அணியின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் சகால், சக பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி சாகல் டிவி என்ற பெயரில் பிசிசிஐ இணையதளத்தில் வெளியாகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த ஷோவில் ரோகித் சர்மா உள்ளிட்டோரை சகால் பேட்டி கண்டுள்ளார். 

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 5-வது போட்டியில் வென்று 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அப்போது டோனியை பேட்டி எடுக்க சாகல் கேட்ட போது, சாகலிடம் இருந்து தப்பி தோனி ஓடியதும், அவரை விடாமல் சாகல் துரத்தி தோற்று போவதும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 
1 More update

Next Story