கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட விருப்பம்

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நித்யானா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது ரிவாபா ஜடேஜா, கர்ணி சேனா அமைப்பின் மகளிர் அணி தலைவியாக உள்ளார். இவர் அண்மையில் குஜராத்தில் நடந்த விழாவில் அம்மாநில அமைச்சர் ஆர்.சி.ஃபால்டு முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் களம் காண ரிவாபா முடிவு செய்துள்ளார். குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்த தொகுதியில், பாஜகவின் பூனம் கடந்த முறை வெற்றி பெற்றுள்ளார். அவரையே மீண்டும் களமிறக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Related Tags :
Next Story