அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி ஷேன் வாட்சன்


அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி ஷேன் வாட்சன்
x
தினத்தந்தி 16 May 2019 9:20 AM GMT (Updated: 16 May 2019 9:20 AM GMT)

கடந்த சில தினங்களாக தனக்கு பாராட்டுகளையும், அன்பையும் அளித்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள வாட்சன், மும்பை அணியுடனான ஐபிஎல் இறுதி போட்டி வெற்றிக் கோட்டிற்கு அருகில் சென்று தோல்வியுற்ற போதும் அருமையான போட்டியாக அமைந்தது என பதிவிட்டுள்ளார். அடுத்த சீசனில் ஒரு படி அதிக பங்களிப்பை அளிக்க நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறியுள்ள வாட்சன் விசில் போடு என்று கூறி முடித்துள்ளார்

ஐ.பி.எல். தொடரில், மும்பைக்கு எதிரான இறுதி போட்டியில், முழங்காலில் ஏற்பட்ட காயத்துடன், ரத்தம் சொட்டசொட்ட விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். அந்த காயத்தால் அவரது முழங்காலில் தையல் போடப்பட்டுள்ளது. தனக்கு காயம் ஏற்பட்டதை வெளியே சொல்லாமல் வெற்றிக்காக வாட்சன் போராடிய உண்மை வெளியில் தெரியவர, தோற்றாலும் பரவாயில்லை என ரசிகர்கள் அவரை கொண்டாடித்தீர்த்தனர்.


Next Story