‘ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும்’ - ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் சொல்கிறார்


‘ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும்’ - ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் சொல்கிறார்
x
தினத்தந்தி 20 May 2019 4:47 AM IST (Updated: 20 May 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஜூலை 14-ந்தேதி உலக கோப்பை எங்கள் கையில் இருக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் கூறியுள்ளார்.

சிட்னி,

உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அது பற்றி கனவு காண்பது முக்கியம். அதற்காக கனவு எப்போதும் நனவாகி விடும் என்று அர்த்தம் அல்ல. ஆனால் அது சாதிப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கி தரும். அதே சமயம் நம்பிக்கையோடு செயல்பட்டால் தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும். ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் (இறுதிப்போட்டி நடக்கும் நாள்) பால்கனியில் நின்றபடி உலக கோப்பையுடன் நாங்கள் போஸ் கொடுப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் இதை செய்வேன்’ என்றார்.


Next Story