நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம்


நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம்
x
தினத்தந்தி 15 May 2020 10:00 PM GMT (Updated: 15 May 2020 6:48 PM GMT)

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.


* ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிப்போனதால் அடுத்த ஆண்டு அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு கூடுதல் செலவாக ரூ.6 ஆயிரம் கோடி வரை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்’ என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.

* ‘கொரோனா தாக்கம் முடிந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது உலக போட் டிகளை விட முதலில் உள்ளூர் முதல்தர போட்டிகள், இரு நாட்டு தொடர்களை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

* இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது அசத்திய உயரமான வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜாமிசன் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் முதல்முறையாக சேர்க்கப்பட்டு உள்ளார். இதே போல் தென்ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் பேட்ஸ்மேன் 28 வயதான டேவோன் கான்வேவுக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒப்பந்தத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

Next Story