‘திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது’ - டோனி


‘திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது’ - டோனி
x
தினத்தந்தி 27 Oct 2020 3:52 AM IST (Updated: 27 Oct 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுத்தது.

துபாய்,

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், ‘எங்களது நிறைவான ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும். நாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. எங்களது திட்டத்தை நேர்த்தியாக செயல்படுத்தினோம். சரியான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி அவர்களை சவாலான ஸ்கோரை எட்டவிடாமல் கட்டுப்படுத்தினோம். ஆடுகளம் மெதுவாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதுவரை பேட்டிங்கில் எங்கள் திறனை சீராக வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கம் அமைந்தது. ருதுராஜ் அருமையாக பேட்டிங் செய்தார். நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. அதற்கான கணக்குளை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அடுத்து வரும் ஆட்டங்களிலும் முடிவை பற்றி கவலைப்படாமல் இதேபோல் அனுபவித்து விளையாட வேண்டும்’ என்றார்.
1 More update

Next Story