கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு + "||" + Test match against India: South Africa squad announced

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஜோகன்னஸ்பர்க்,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது

தென்ஆப்பிரிக்காவில்  ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின், தென்ஆப்பிரிக்க பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்படுவதுடன், 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 17ந்தேதி துவங்குவதாக இருந்தது.  தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26 ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட  தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி :  டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, சரேல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், அன்ரிச் நோர்ஜோ ,கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், க்ளென்டன் ஸ்டுர்மன், ப்ரீனெலன் சுப்ரயன், சிசண்டா மாகலா, ரியான் ரிக்கல்டன், டுவான் ஆலிவியர்.