பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: பிரிஸ்மென் ஹீட் அணியை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்சேர்ஸ்


பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்: பிரிஸ்மென் ஹீட் அணியை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்சேர்ஸ்
x
தினத்தந்தி 9 Dec 2021 3:02 AM GMT (Updated: 9 Dec 2021 3:02 AM GMT)

பெர்த் ஸ்கார்சேர்ஸ் அணியில் அதிகபட்சமாக பேட்டர்சன் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார் .

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள்  பிக்பாஷ் லீக் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன

இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் மற்றும் பிரிஸ்மென் ஹீட் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்சேர்ஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பேட்டர்சன் 30 பந்துகளில் 55 ரன்கள்  குவித்தார் .

158 ரன்கள் இலக்குடன் ஆடத் தொடங்கிய பிரிஸ்மென் ஹீட் அணி 19.5 ஓவர் முடிவில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பிரிஸ்மென் ஹீட் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெர்த் ஸ்கார்சேர்ஸ்  அணி.

Next Story