விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி - கங்குலி அறிவிப்பு!
விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு பின், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.அதில் பெங்களூருவில் நடக்க உள்ள போட்டி, பிங்க் பந்தை பயன்படுத்தி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தாண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேப்டன் பதவி குறித்து தேர்வுக்குழுவினர் முடிவு செய்வார்கள் அந்த பொறுப்பை அவர்களிடம் விட்டுவிடுங்கள் என்றும் கூறினார்.
Related Tags :
Next Story