ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு விராட் கோலி தனது "வாழ்த்துக்களை" தெரிவித்தார்.
புது டெல்லி,
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில், நார்த் சவுண்ட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி, இன்று பிற்பகுதியில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு தனது "வாழ்த்துக்களை" தெரிவித்தார்.
ஜூனியர் உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா உள்ளது, இதுவரை நான்கு முறை பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
2008 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஜூனியர் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தினார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் விராட் கோலி, "உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜூனியர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
Best wishes to our U-19 boys for the World Cup final. 🇮🇳💪
— Virat Kohli (@imVkohli) February 5, 2022
இந்த வார தொடக்கத்தில், தற்போதைய ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியின் சில உறுப்பினர்களுடன் விராட் கோலி உரையாடியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story