‘ஊடகங்கள் அமைதியாக இருந்தால் போதும்...’ - கோலி குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்!


‘ஊடகங்கள் அமைதியாக இருந்தால் போதும்...’ - கோலி குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்!
x
தினத்தந்தி 15 Feb 2022 9:01 AM GMT (Updated: 15 Feb 2022 9:01 AM GMT)

விராட் கோலியின் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

கொல்கத்தா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- ெவஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (இரவு 7.30 மணி) நடக்கிறது.

இதற்கிடையே , இந்த போட்டிக்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் ‘பார்ம்’ குறித்தும் அவருடைய மனநிலை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விராட் கோலியின் பேட்டிங் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை என ரோகித் சர்மா கூறினார். மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மா பேசுகையில், 

“நீங்கள்(செய்தி ஊடகங்கள்) சிறிது காலம் அமைதியாக இருந்தால், கோலி மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார் என்று நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் உங்கள் தரப்பிலிருந்து அதிகமான கருத்துக்களை தர வேண்டாம். அப்படி இருக்கையில், அனைத்து விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்படும். 

அவரை நான் கவனித்தவரையில், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார்.”

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Next Story