மோசமான நிலைமையை மாற்றி காட்டுவோம்: ராஜஸ்தான் பயிற்சியாளர்


image credit: india.com
x
image credit: india.com
தினத்தந்தி 17 March 2022 9:50 PM GMT (Updated: 17 March 2022 9:50 PM GMT)

ஐபிஎல்-லில் ராஜஸ்தான் அணியின் மோசமான நிலையை மாற்றிக்காட்டுவோம் என்று அந்த அணியின் பயிற்சியாளரான சங்கக்காரா கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 3 சீசனில் லீக் சுற்றை கூட தாண்டாமல் கடைசி இரு இடங்களுக்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தது. இந்த முறை மோசமான நிலைமையை மாற்றி காட்டுவோம் என்று அந்த அணியின் இயக்குனரும், தலைமை பயிற்சியாளருமான சங்கக்கரா (இலங்கை) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சங்கக்கரா கூறும்போது, ‘போட்டி இல்லாத காலங்களில் அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்தோம். எந்தெந்த விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்பதை கவனித்தோம். அதன் அடிப்படையில் வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்தோம். சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் இருவரையும் பெற்றுள்ளோம். டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, நாதன் கவுல்டர் நிலே, மெக்காய் என்று வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் வைத்துள்ளோம். ஏற்கனவே ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜோஸ்பட்லரை தக்க வைத்தோம். இவர்களுடன் ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், வான்டெர் துஸ்சென் போன்ற துடிப்பான வீரர்களும் இணைவதால் ஒவ்வொரு துறையையும் நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். 

மொத்தத்தில் நாங்கள் திறமைமிக்க அணியாக இருக்கிறோம். அணி எப்படி இருந்தாலும் வீரர்கள் களத்தில் எப்படி திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம் ’ என்றார்.


Next Story