நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை : மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா


நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை : மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா
x

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று  நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதின. இந்த ஆட்டத்தில்  பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ;

நாங்கள் வித்தியாசமான செயல்முறையுடன் விளையாட முயற்சிக்கிறோம்,  ஆனால் அது நடக்கவில்லை . ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது, இந்த ஆடுகளத்தில் 190 ரன்னுக்கு மேல் எடுக்க கூடிய இலக்குதான்.சில ரன்அவுட்டுகள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை பஞ்சாப் அணியின் பந்துவீச்சு இரண்டாவது பாதியில் சிறப்பாக இருந்தது .இவ்வாறு அவர் கூறினார் 

Next Story