ஐபிஎல் : கொல்கத்தா அணியின் ரகானே காயம் காரணமாக விலகல்


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 17 May 2022 9:17 AM GMT (Updated: 2022-05-17T14:47:53+05:30)

ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து மீதமுள்ள போட்டியிலிருந்து விலகியுள்ளார்

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.

கொல்கத்தா அணி இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி  பெற்று ,பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை .

இந்நிலையில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து மீதமுள்ள போட்டியிலிருந்து   விலகியுள்ளார் 

Next Story