2024 ஐ.பி.எல். தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் - ஐ.பி.எல். தலைவர் அருண் தூமல்


2024 ஐ.பி.எல். தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் - ஐ.பி.எல். தலைவர் அருண் தூமல்
x

கோப்புப்படம்

2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் தூமல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவில் லீக் ஆட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய அரசு, ஏஜென்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். பொதுத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். அதன்பிறகு அதற்கேற்ப திட்டமிடுவோம். தேர்தல் நேரத்தில் எந்த மாநிலத்தில் எந்த ஆட்டத்தை நடத்துவது என்பது குறித்து திட்டமிடுவோம்.

ஐ.பி.எல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பொதுத் தேர்தல்கள் ஏப்ரலில் இருக்கும். எனவே நாங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் அதைச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story