இந்தியாவில் 2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி


இந்தியாவில் 2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
x

2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

பர்மிங்காம்,

பர்மிங்காமில் நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2025-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

இதே போல் 2024-ம் ஆண்டு 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டியை வங்காளதேசத்திலும், அதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது.

1 More update

Next Story