டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் - லபுஸ்சேன் சாதனை


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் - லபுஸ்சேன் சாதனை
x

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சிறப்பை மார்னஸ் லபுஸ்சேன் பெற்றார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு மோதல்) அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது.

மார்னஸ் லபுஸ்சேன் 120 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஸ்கோர் 428 ஆக உயர்ந்த போது லபுஸ்சேன் 163 ரன்களில் (305 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 137 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

இதனிடையே இந்த ஆட்டத்தின் மூலம் லபுஸ்சேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை (51 இன்னிங்சில் 3,010 ரன்) கடந்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதே நேரம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் 33 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதே அதிகபட்ச சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story