தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி.!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி.!
x
தினத்தந்தி 9 Sep 2023 7:39 PM GMT (Updated: 9 Sep 2023 9:50 PM GMT)

ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

புளோம்பாண்டீன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இருந்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தன் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் மற்றும் லபுஷேன் இருவரும் சதமடித்து அசத்தினர். அத்துடன், ஹெட், ஹோஸ் இங்லிஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சம்ஷி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் (45), கேப்டன் பவுமா (46) இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர்(49), கிளாசன்(49) இருவரும் போராடினர். ஆனால் அவர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது போட்டி ஆஸ்திரேலிய அணியின் பக்கம் சென்றது.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 0-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


Next Story