2வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு


2வது ஒருநாள் போட்டி:  ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 24 Sep 2023 8:08 AM GMT (Updated: 24 Sep 2023 8:21 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் பும்ரா விளையாடவில்லை. பும்ராவிற்கு பதிலாக வேகபந்து வீச்சாளர் முகேஷ் குமார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story