2வது ஒருநாள் போட்டி: லிவிங்ஸ்டன் அதிரடி..! நியூசிலாந்து அணிக்கு 227 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 226ரன்கள் எடுத்தது. லியாம் லிவிங்ஸ்டன் 95 ரன்கள் , சாம் கரன் 42 ரன்கள் எடுத்தனர்.
சவுதாம்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் டிவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சவுதாம்டானில் இன்று நடந்து வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்ட்டது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலந்து அணி தொடக்க வீரர் பேர்ஸ்டோ 6 ரன்களும் , பின்னர் வந்த ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமலும் , ஸ்டோக்ஸ் 1 ரரன்களும் எடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .ஹார்ரி புரூக் மேத் ஹென்ரி பந்துவீச்சில் 2 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் பட்லர் , மொயீன் அலி இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பட்லர் 30 ரன்களும் , மொயீன் அலி 33 ரன்களும் எடுத்து வெளியேறினர்.தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் , சாம் கரன் இருவரும் அதிரடி காட்டினர், ;இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர்.
சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் அரை சதம் அடித்தார். இறுதியில் 34 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி226 ரன்கள் எடுத்தது. லியாம் லிவிங்ஸ்டன் 95 ரன்கள் , சாம் கரன் 42 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட் , டிம் சவுதி 2 விக்கெட் வீழ்த்தினர்.