2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு....


2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு....
x

Image :   ICC 

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

சவுதாம்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் டிவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சவுதாம்டானில் இன்று நடந்து வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்ட்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலந்து அணி தொடக்க வீரர் பேர்ஸ்டோ 6 ரன்களும் , பின்னர் வந்த ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமலும் , ஸ்டோக்ஸ் 1 ரரன்களும் எடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .இதனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Next Story