பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு...!


பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு...!
x

Image Courtesy: AFP 

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது. அடுத்ததாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றும் என்பதால் பாகிஸ்தானை தோற்கடிக்க நியூசிலாந்து கடுமையாக முயற்சிக்கும் இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story