நாளை 2வது டி20 போட்டி: வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி ?


நாளை 2வது டி20 போட்டி:   வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி ?
x
தினத்தந்தி 25 Nov 2023 2:39 PM IST (Updated: 26 Nov 2023 2:07 PM IST)
t-max-icont-min-icon

2-வது டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது

விசாகப்பட்டினம்,

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (42 பந்தில் 80 ரன்), இஷான் கிஷன் (39 பந்தில் 58 ரன்), ரிங்கு சிங் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும்.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்க போராடும். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

1 More update

Next Story