2வது டி20 போட்டி; ஜவதுல்லாஹ், அலி நசீர் அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த யுஏஇ..!


2வது டி20 போட்டி; ஜவதுல்லாஹ், அலி நசீர் அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த யுஏஇ..!
x

Image Courtesy: @EmiratesCricket

யுஏஇ அணி தரப்பில் ஜவதுல்லாஹ், அலி நசீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆடியது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஹஸ்மத்துல்லா 36 ரன், குர்பாஸ் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய இப்ராகிம் ஜட்ரான் 4 ரன், நஜிபுல்லா ஜட்ரான் 12 ரன், ரசூலி 0 ரன், ஓமர்சாய் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் வெற்றிக்காக போராடிய நபி 47 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து யுஏஇ வெற்றி பெற்றது.


Next Story