2-வது டி20 போட்டி; நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்...!
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெலிங்டன்,
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் நாளை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றால் முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க முடியும் என்பதால் வங்காளதேச அணி தீவிர முனைப்புடன் களமிறங்கும். அதே வேளையில் சொந்த மண்ணில் தொடரை இழக்க கூடாது என்று நியூசிலாந்து அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.