தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; இந்திய அணியில் இந்த 2 வீரர்களை சேர்க்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; இந்திய அணியில் இந்த 2 வீரர்களை சேர்க்க வேண்டும் -  சுனில் கவாஸ்கர்
x

கோப்புப்படம்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் புதன் கிழமை தொடங்க உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரவீந்திர ஜடேஜா நல்ல உடல் தகுதியில் இருப்பார் என்று நம்புகிறேன். அவர் அடுத்த போட்டியில் கட்டாயம் இடம் பெற வேண்டும். அவரால் இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்த முடியும். மேலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் மற்றொரு வாய்ப்பாக இருப்பார்.

பொதுவாக கேப்டவுன் ஆடுகளத்தில் பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும். எனவே ஸ்விங் பந்துவீச்சாளர்களால் அதிக விக்கெட் எடுக்க முடியும். எனவே முகேஷ் குமார் நல்ல தீர்வாக இருப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story