ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் விடுவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் விடுவிப்பு
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாக்பூர்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன்களும், இந்தியா 400 ரன்களும் குவித்தது. இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் வரும் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக உனாத்கட் விளையாடுவதால் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

பெங்கால் அணிக்கு எதிராக பிப்ரவரி 16ஆம் தேதி முதல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சவுராஷ்டிரா அணியில் ஜெய்தேவ் இப்போது இணைவார்.


Next Story